கம்பராமாயணம் 2042 · அயோத்தியா 6.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தம்பி - இராமனது தம்பியாகிய இலக்குவன்; “நிற்றி ஈண்டு” என்று - குகனைப் பார்த்து இங்கேயே நில் என்று சொல்லி; புக்கு - (இராமன் இருந்த தவச்சாலையில் உள்ளே) புகுந்து; நெடியவன் தொழுது - பெருமையிற் சிறந்துயர்ந்த இராமனை வணங்கி, “கொற்றவ - அரசனே!; உள்ளம் தூயவன் - மனத்தால் பரிசுத்தமானவன்; தாயின் நல்லான் - தாயைக் காட்டிலும் மிக்க அன்பையுடைய நல்லவன்; எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை - மோதுகின்ற நீரை உடைய கங்கையாற்றில் செல்லும் மரக்கலங்களுக்குத் தலைவன்; குகன் ஒருவன் - குகன் என்ற பெயரை உடைய ஒருவன்; நிமிர்ந்த கூட்டச் சுற்றமும் தானும் - பெருந்திரளாக உள்ள உறவினரும் தானுமாக; நின்னைக் காணக் குறுகினன்” - உன்னைக் காணும் பொருட்டு வந்துள்ளான்; என்றான்.
அரசரைக் காணச் செவ்வியறிந்து செல்லல் முறை ஆதலின், குகனை வெளியே நிற்கச்செய்து, இராமன்பால் தெரிவிக்கச் சென்றான் இலக்குவன். பார்த்த அளவில் தன்னையே இராமனாக எண்ணும் குகனது வெள்ளை உள்ளத்தை அறிந்தபடியால் “உள்ளம் தூயவன்” என்று முதலிற் கூறினான். உண்ணுதற்குரிய பொருள்களை என்றும் எடுத்துவருதல் தாயின் தன்மையாதலின் தேனும் மீனும் கொண்டணுகிய குகனது தாயன்பைக் கருதித் “தாயின் நல்லான்” என்றான். நாம் கங்கையைக் கடத்தல் வேண்டும் ஆதலின், இவனது தோழமை நமக்கு மிகவும் இன்றியமையாதது என்பதைப் புலப்படுத்த 'நாவாய்க்கு இறை' என்றான். இங்ஙனம் இராமன் ஏற்றுக்கொள்ளும் முன்னரே இலக்குவன் குகனது தோழமையை ஏற்று அங்கீகரித்தான் என்னும்படி இவ்வறிமுகம் அமைந்துள்ளது அறிந்து இன்புறத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying "Wait here," the brother went in, bowed to the exalted one, and said,
- "Victorious king! One has come near to see you, with his great crowd
- of kinsmen: pure of heart, kinder than a mother,
- lord of the boats on the dashing waters of the Gaṅgai, one Kukaṉ."
What the poem says
Following the etiquette of approaching a king at the right moment, Ilakkuvaṉ asks Kukaṉ to wait and goes in to announce him. His introduction is carefully chosen.
He calls Kukaṉ pure of heart because he has just seen his guileless mistake; kinder than a mother because, like a mother, he has come bringing food; and lord of the boats because they will need to cross the Ganges. In effect Ilakkuvaṉ has already accepted Kukaṉ as a friend before Irāmaṉ has even met him.