கம்பராமாயணம் 2044 · அயோத்தியா 6.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“ஈண்டு இருத்தி” என்னலோடும் - இங்கே அமர்வாயாக என்று இராமன் கூறிய அளவிலும்; இருந்திலன் - தன்னடக்கத்தால் இருந்தானில்லை; எல்லை நீத்த அருத்தியன் - அளவு கடந்த அன்புடையனாய்; “அமுதினுக்கு அமைவதாகத் தேனும் மீனும் திருத்தினென் கொணர்ந்தேன் - தேவரீருக்கு உணவாகப் பொருந்தும்படி தேனையும், மீனையும் தூய்மை செய்து ஆராய்ந்து கொண்டு வந்துள்ளேன்; திரு உளம் என்கொல்?” என்ன - தங்கள் மனக்கருத்து யாதோ? எனக் கூறி நிற்க; வீரன் - இராமன்; விருத்த மாதவரை நோக்கி - வயது முதிர்ந்த முனிவர்களைப் பார்த்து; முறுவலன் - இளஞ்சிரிப்புச் செய்தவனாய்; விளம்பல் உற்றான் - சொல்லத் தொடங்கினான்.
தவத்தோர் உண்ணத்தகாத தேனையும் மீனையும் அன்போடு குகன் கொடுக்கின்றான். அருகே முனிவர்கள் இராமன் என்செய்வானோ என்று கருதும் அகக்குறிப்பு உடையவராக ஆயினமை கண்டு, அவர்களுக்கும் குகனது அன்பின் பெருக்கை உணர்த்துமுகத்தான் இளநகை செய்து கூறுவானாயினன் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When told "Sit here," he did not sit; overflowing with boundless
- longing, he said, "Honey and fish, fit to be your meal,
- I have cleaned and brought; what is your gracious will?" And the hero,
- looking at the aged great ascetics, smiled and began to speak.
What the poem says
Too humble to sit even when invited, Kukaṉ offers his gift of honey and fish, carefully cleaned and prepared, and asks whether Irāmaṉ will accept it.
Honey and fish are foods that ascetics may not eat, and Irāmaṉ, now living as an ascetic, is in the sages' hermitage. Seeing the old sages wondering what he will do, Irāmaṉ smiles and answers in a way meant for them as well as for Kukaṉ.