கம்பராமாயணம் 2045 · அயோத்தியா 6.42

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அரிய , தாம் உவப்ப , உள்ளத்து அன்பினால் அமைந்த , காதல்
தெரிதரக் கொணர்ந்த , என்றால் அமுதினும் சீர்த்த ! அன்றே
பரிவினில் தழீஇய என்னில் , பவித்திரம் ; எம் அனோர்க்கும்
உரியன ; இனிதின் நாமும் உண்டனெம் ; அன்றே ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

“அரிய - அருமையான பொருள்கள்; தாம் உவப்ப - தாம் மகிழ்ச்சியடைதற்குக் காரணமானவை, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த - மனத்துள்ளே இருக்கின்ற அன்பின் முதிர்ச்சியாகிய பக்தி அனைவர்க்கும் புலப்படுமாறு கொண்டு வரப்பட்டவை; என்றால் - என்று ஆகுமானால்; அமிழ்தினும் சீர்த்த அன்றே? - தேவர் அமுதத்தைக் காட்டிலும் சிறப்புடையவை அல்லவா; பரிவினில் தழீஇய என்னின் பவித்திரம் - எப்பொருளும் அன்பினால் கொண்டு வரப்பட்டவை என்றால் அவை தூய பொருள்களே; எம்மனோர்க்கும் - எம்போன்ற தவம் மேற்கொண்டவர்களுக்கும்; உரியன - ஏற்றுக் கோடற்குரியனவே; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?” - இனிமையாக நாமும் உண்டதற்குச் சமானம் ஆகும் அன்றோ; என்றான்.

கையுறைப் பொருள்கள் யாதாயினும் கிடைத்தற்கரியதாக, கொணர்வார் தம் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும் அன்பின் முதிர்வால் பக்தி புலப்பட அளிக்கப் பெறுமானால் அவை அமுதினும் மேலானவை. தூய்மையும் தூய்மையின்மையும் அன்பினைப் பொறுத்ததே ஆகும். அன்பினால் குகன் கொடுத்த பொருள்கள் தவத்தோர்க்காகாத தேனும் மீனும் ஆயினும் அன்பு கலத்தலால் தூய்மையுடையதாய் ஏற்றுக்கொளற்பாலவே யாகும் - என்றான் இராமன். முனிவர்களையும் நிறைவு செய்து குகனையும் முழுமையான மனநிறைவுக்கு உரியவனாக ஆகும் வகையில் இராமனது உரை அமைந்தது அறிந்து இன்புறுதற்குரியது. வாயால் உண்பதைவிட மனத்தால் ஏற்றுக்கோடல் அன்புடையாரிடத்து உயர்ந்துவிடுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If things rare, things that gave the giver joy, brought so that the love
  2. formed in his heart shows clearly, then they surpass even nectar, do they not?
  3. If they are offered with tender care, they are pure, and fit
  4. even for such as us; have we not, sweetly, already eaten them?" he said.

What the poem says

Irāmaṉ's reply satisfies both the sages and Kukaṉ. A gift brought with evident love, he says, is better than the nectar of the gods; love makes any offering pure, so it is acceptable even to ascetics like himself.

Without tasting the forbidden food, he declares that he has, in effect, already eaten it with pleasure. Receiving a gift with the heart counts for more among those who love than eating it with the mouth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ariya, tām uvappa, uḷḷattu aṉpiṉāl amainta, kātal
teritarak koṇarnta, eṉṟāl amiḻtiṉum cīrtta! aṉṟē
pariviṉiṉ taḻīiya eṉṉiṉ, pavittiram; emmaṉōrkkum
uriyaṉa; iṉitiṉ nāmum uṇṭaṉem aṉṟō ' eṉṟāṉ.