கம்பராமாயணம் 2047 · அயோத்தியா 6.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கார் குலாம் நிறத்தான் கூற - மேகம் போல் உள்ள கரு நிறம் உடைய திருமேனியனாகிய இராமன் இவ்வாறு கூற; காதலன் உணர்த்துவான் - அவனிடத்தில் பேரன்பு கொண்ட குகன் சொல்வான்; “இப் பார் குலாம் செல்வ! - இந்தப் பூமி முழுவதும் ஆளும் செல்வத்துக்குரியவனே! நின்னை - உன்னை; இங்ஙனம் பார்த்த கண்ணை - இவ்வாறு சடைமுடிக் கோலத்தோடு பார்த்த கண்களை; ஈர்கிலாக் கள்வனேன் யான் - இதுகாறும் பிடுங்கி எறியாமல் உன்பால் அன்புடையவன் போல நடிக்கின்ற திருடன் யான்; இன்னலின் இருக்கை நோக்கி - இத்தகைய துன்பத்தில் இருந்தபடியைப் பார்த்து; தீர்கிலேன் - உன்னைப் பிரிய மாட்டாதவனாக இருக்கிறேன்; ஆனது - என் நிலைமை அவ்வாறாகியது; ஐய! - ஐயனே!; அடிமை செய்குவென்” - (உன் அருகேயே இருந்து உனக்குரிய) தொண்டுகளைச் செய்வேன்; என்றான்.
அரச குமாரனாகிய இராமன் முடிபுனையாது சடைமுடி தரித்த கோலத்தோடு வந்தது கண்டு மனம் இரங்கித் தழுதழுத்த குகன் தன்னைத் தாழ்மைப் படுத்திக்கொண்டு “இவ்வாறு பார்த்த கண்ணைப் பிடுங்கி எறியாமல் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேனே, நான் ஒரு வஞ்சகன்” என்று அவலித்ததாகக் கொள்க. இராமனுடனேயே இருந்து தொண்டு செய்ய வேண்டினான் குகன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the one whose colour is the cloud's had spoken, the loving one replied: "O lord,
- rich in this whole wide earth! I am a thief who has not torn out
- the eyes that saw you like this; seeing you in such distress
- I cannot leave you; so it is, my lord! I will serve you as your slave."
What the poem says
Kukaṉ cannot bear to go. The rightful lord of the whole earth stands before him with matted hair like a hermit instead of a crown. Calling himself a fraud, he says he should have torn out the eyes that saw his king in such a state, yet here he still is.
Seeing Irāmaṉ in this hardship, he refuses to leave him and asks to stay close by and serve him.