கம்பராமாயணம் 2048 · அயோத்தியா 6.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கோதை வில் குரிசில் - வெற்றிமாலை அணிந்த வில்லையுடைய இராமன்; அன்னான் கூறிய கொள்கை கேட்டான் - அக் குகனது பேச்சில் வெளிப்பட்ட அவன் மனக்கருத்தைக் கேள்வி மூலம் அறிந்தான்; சீதையை நோக்கி - சீதையைப் பார்த்து; தம்பி திருமுகம் நோக்கி - தம்பியாகிய இலக்குவனது அழகிய முகத்தைப் பார்த்து (இருவருக்கும் குகனது தோழமையில் உடன்பாடு என்பதைக் குறிப்பால் அறிந்து); “தீராக் காதலன் ஆகும்” என்று - நம்பால் என்றும் நீங்காத பேரன்புடையவனாவான் என்று சொல்லி; கருணையின் மலர்ந்த கண்ணன் - கருணையால் மலர்ச்சியடைந்த கண்களை உடையவனாய்; “யாதினும் இனிய நண்ப! - எல்லாப் பொருள்களினும் இனிமையான நண்பனே; ஈண்டு எம்மொடு இருத்தி” - இங்கே எங்களோடு (இன்று) தங்கி இருப்பாயாக; என்றான்.
தம்பி முன்னரே குகனை அறிமுகப்படுத்தும்போதே இராமன்பால் தன் உள்ளக்கிடக்கையைப் புலப்படுத்தினன் ஆதலின், இங்கே வேண்டப்படுவது சீதையின் உடன்பாடே ஆதலின், அதனை முதற்கண் கூறினார். யாரினும் இனிய நண்ப என்னாது, 'யாதினும்' என அஃறிணை வாசகத்தாற் சொல்லி மக்களே அன்றி அன்பு செய்தற்குரிய மற்றப் டவ வு அடங்கக் கூறிய நயம் அறிந்து இன்புறத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The prince of the garlanded bow heard the resolve that man had spoken;
- he looked at Cītai, he looked at his brother's fair face, and saying,
- "He is one whose love will never fail," he whose eyes had blossomed with compassion
- said, "Friend dearer than anything! Stay here with us."
What the poem says
Before answering, Irāmaṉ glances at Cītai and at Ilakkuvaṉ to see whether they agree. Ilakkuvaṉ has already shown his approval by the way he introduced Kukaṉ, so it is Cītai's consent that matters most, and the poet names her first.
Seeing that they agree, Irāmaṉ declares Kukaṉ a friend of unfailing love and invites him to stay. He calls him dearer than anything, not just dearer than anyone, so that the comparison takes in every beloved thing, not only people.