கம்பராமாயணம் 2048a · அயோத்தியா 6.45a

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அடி தொழுது - (இராமன் இன்று எம்மொடு தங்குக என்று சொல்லக் கேட்ட குகன்) இராமன் திருவடிகளை வணங்கி; உவகை தூண்ட - மகிழ்ச்சி மேல் மேல் மிக; ஆழி அன்ன துடியுடைச் சேனை வெள்ளம் அழைத்தனன் - கடலை ஒத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப் பெருக்கை அழைத்து; பள்ளியைச் சுற்ற ஏவி - (விலங்கு முதலியவற்றால் துன்பம் நேராவாறு) அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப் பாதுகாக்கக் கட்டளையிட்டு; வரிசிலை பிடித்து - (தானும்) கட்டமைந்த வில்லைப் பிடித்து; வாளும் வீக்கி - (முன்பு கழித்த) வாளையும் அரைக்கச்சிலே கட்டி; வாய் அம்பு பற்றி - கூரிய அம்பைப் பிடித்து; இடியுடை மேகம் என்ன இரைத்து - இடியோடு கூடிய மழை மேகம் போல உரத்த சத்தம் இட்டு; அவண் - அத்தவச்சாலையில்; காத்து நின்றான் - அம்மூவரையும் காவல் செய்து நின்றான்.

இராமன் அனுமதி தந்த மகிழ்ச்சியால் அவனைக் காக்கும் பொறுப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறான் குகன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bowing at his feet, driven by joy, he called up
  2. his sea-like flood of an army with its tuṭi drums and ordered it to ring the hermitage;
  3. he gripped his well-made bow, tied on his sword again, took up his sharp arrows,
  4. and, roaring like a cloud full of thunder, he stood guard there.

What the poem says

Overjoyed at being allowed to stay, Kukaṉ bows to Irāmaṉ and summons his large force of hunters to surround the hermitage so that no wild beast or other danger can approach.

He takes up again the bow, sword and arrows he had laid aside when he arrived, and keeps watch over the three through the night, his shouts like thunder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭi toḻutu uvakai tūṇṭa aḻaittaṉaṉ, āḻi aṉṉa
tuṭiyuṭaic cēṉai veḷḷam, paḷḷiyaic cuṟṟa ēvi,
vaṭi cilai piṭittu, vāḷum vīkki, vāy ampu paṟṟi,
iṭiyuṭai mēkam eṉṉa iraittu avaṇ kāttu niṉṟāṉ.