கம்பராமாயணம் 2054 · அயோத்தியா 6.51

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செஞ்செவ்வே சேற்றில் தோன்றும் தாமரை - செக்கச் செவேல் என்று சேற்றில் தோன்றிய செந்தாமரை மலர்; தேரில் தோன்றும் - ஒற்றைச் சக்கரத் தேரில் உதயமான; வெஞ்சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த - வெம்மையான கதிர்களை உடைய சூரியனது வடிவத்தைப் பார்த்து மலர்ந்தன; செய்ய - சிவந்ததாகிய; வஞ்சி - வஞ்சிக் கொடிபோல்பவளாகிய சீதையினிடத்தில்; வாழ் வதனம் என்னும் தாமரை - உள்ள முகம் என்னும் தாமரை; வேறு ஓர் அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி - செஞ்சூரியனில் மாறுபட்டு வேறொன்றான கருஞாயிற்றை ஒத்த இராமனைப் பார்த்து; மலர்ந்தது - மலர்ந்து விளங்கியது.

கருமை நிறம் உடைய இராமனை அஞ்சன ஞாயிறு என்றார். தடாகத் தாமரை செஞ்ஞாயிறு கண்டு மலர்ந்தது; முகத் தாமரை கருஞாயிறு கண்டு மலர்ந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lotuses that rise bright red from the mud opened,
  2. gazing at the form of the lord of hot rays who appears in his chariot;
  3. and gazing at her lord, who was like another sun, a sun dark as kohl,
  4. the lotus that is the face of the red vañci-creeper lady bloomed.

What the poem says

At sunrise the red lotuses in the ponds open toward the sun. At the same moment Cītai wakes and looks at Irāmaṉ, and her face opens like a lotus too.

Irāmaṉ is a second sun, but a dark one, dark as kohl, because of his complexion. The pond lotus blooms for the red sun, the lotus of Cītai's face for the dark one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceñcevvē cēṟṟil tōṉṟum tāmarai, tēril tōṉṟum
veñ cuṭarc celvaṉ mēṉi nōkkiṉa virinta; vēṟu ōr
añcaṉa ñāyiṟu aṉṉa aiyaṉai nōkkic ceyya
vañci vāḻ vataṉam eṉṉum tāmarai malarntatu aṉṟē.