கம்பராமாயணம் 2055 · அயோத்தியா 6.52

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாமத் தோள் முதற்கு அமைந்த வில்லான் - அச்சம் தரும் தோளிடத்திற்குப் பொருந்திய வில்லை உடைய இராமன்; நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி - வைகறைக் காலத்தில் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் விரும்பிச் செய்து; மறையவர் தொடரப் போனான் - வேதியர்கள் தன்னைத் தொடர்ந்து வரச் செல்கின்றவன்; ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி - அடிமைத்தன்மைக்குப் பொருந்திய நட்புரிமை உடைய அன்புள்ளம் கொண்ட குகனைப் பார்த்து; “ஐய! - ஐயனே; கோள் முதற்கு அமைந்த நாவாய் - கொண்டு செல்லுதற்குரிய தரம் வாய்ந்த மரக்கலங்களை; விரைவின் கொணருதி” - விரைவாகக் கொண்டு வருவாயாக; என்றான் -.

தோள் முதல் - முதல் - இடம் என்னும் பொதுப் பொருள். நாள் முதல் வைகறையில் தொடங்குமாதலின் வைகறை யென்றாம் - அது காலைச்சந்தி நிகழ்த்துதற்கு உரிய பொழுது ஆகலின்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having gladly performed all that befits the start of the day, he with the bow
  2. that suits his fearsome shoulder went on, the Brahmins following him,
  3. and looking at the loving one whose friendship was fit for a servant, said, "Friend!
  4. Bring quickly the boats that are fit to carry us."

What the poem says

At dawn Irāmaṉ completes the morning rites, the twilight worship performed at daybreak, and sets out with the sages walking behind him.

He turns to Kukaṉ, whose friendship is mixed with a servant's devotion, and asks him to bring boats suitable for the crossing without delay.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāḷ mutaṟku amainta yāvum nayantaṉaṉ iyaṟṟi, nāmat
tōḷ mutaṟku amainta villāṉ, maṟaiyavar toṭarap pōṉāṉ,
āḷ mutaṟku amainta kēṇmai aṉpaṉai nōkki, 'aiya!
kōḷ mutaṟku amainta nāvāy koṇaruti viraiviṉ; eṉṟāṉ.