கம்பராமாயணம் 2059 · அயோத்தியா 6.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
துகில் போலும் தோல் உள - நூல் ஆடை போல உள்ள மென்மையான தோல்கள் உள்ளன; சுவை உள - சுவையுடைய இனிய பொருள்கள் பல உள்ளன; தொடர் மஞ்சம் போல் - தூங்குதற்குக் கயிற்றால் பிணித்த தொட்டிற் கட்டில் போல்; பரண் உள - பரண்கள் உள்ளன; வைகும் புரை உள - தங்குதற்குக் குடில்கள் உள்ளன; கடிது ஓடும் கால் உள - விரைந்து சென்று எதையும் கொணர்ந்து தரவல்ல வலிய கால்கள் எமக்கு உள்ளன; சிலை பூணும் கை உள - தடுப்பாரை அழிக்க வல்ல வில்லை ஏந்திய கைகள் எம்மிடம் உள்ளன; கலிவானின் மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேம் - செருக்கிய ஆகாயத்தின் மேலே உள்ள பொருளாக இருந்தாலும் விரைந்து சென்று கொண்டு வருவோம்.
“பட்டு நீக்கித் துகில் உடுத்தும்” என்னும் பட்டினப்பாலையுள் (107) மெல்லிய நூலாடையைத் துகில் எனலின் இங்கும் அவ்வாறே கொள்க. விரைந்து பணி செய்யவும் துன்புறுத்துவாரை அழிக்கவும் வலிய காலும், கையும் இருத்தலின் நீங்கள் நிம்மதியாக இங்கே தங்கலாம் என்றான் குகன். அகண்டாகாரமாக விரிந்து ஏனைய நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கினையும் தன்னுள்ளே அடக்கிக்கோடலின் “செருக்கிய ஆகாயம்” எனப் பொருள் உரைத்தாம். “கலி” என்பது 'ஓசை' என்று பொருள் கூறி, ஓசையைத் தன் குணமாக உடைய ஆகாயம் எனலும் ஒன்று. ஆல் அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "There are hides soft as fine cloth; there are sweet things to eat; there are platforms
- like cradle beds slung on ropes; there are huts to stay in; there are legs
- that run swiftly; there are hands that bear the bow; even a thing
- that lies beyond the roaring sky we will fetch for you at once."
What the poem says
Kukaṉ goes on listing what his people can provide: hides as soft as fine cotton to wear, tasty food, raised platforms to sleep on like rope-slung cradle beds, huts for shelter, quick legs to run any errand, and hands armed with bows to drive off anyone who would trouble them.
Anything Irāmaṉ wants, even something beyond the sky, they would fetch at once. The sky is called roaring, or proud, since in Indian thought space contains the other elements and has sound as its quality.