கம்பராமாயணம் 2060 · அயோத்தியா 6.57

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஐயிருபத்தோடு ஐந்தாயிரர் உளர் ஆணை
செய்குநர் , சிலை வேடர் , தேவரின் வலியார் , ஆல்
உய்குதும் அடியோம் , எம் குடில் இடை ஒருநாள் நீ
வைகுதி எனின் , மேல் ஒர் வாழ்வு இலை பிறிது ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

“ஆணை செய்குநர் - நான் இட்ட கட்டளையை நிறைவேற்றுபவராகிய; தேவரின் வலியார் - தேவர்களைக் காட்டிலும் வலிமை படைத்தவர்களாகிய, சிலைவேடர் - வில் ஏந்திய வேடர்கள்; ஐ இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் - ஐந்து இலக்கம் பேர் இருக்கின்றார்கள்; நீ எம் குடிலிடை ஒருநாள் வைகுதி எனின் - இராமா! நீ எம் குடிசையிடத்து ஒருநாள் தங்குவாயானால், மேல் ஓர் வாழ்வு பிறிது இலை - எங்களுக்கு அதைக்காட்டிலும் மேலான வேறொரு வாழ்க்கை இல்லை; உய்குதும் - நாங்கள் ஈடேறிவிடுவோம்;” என்றான்.

ஐ இருபது - நூறு. அதனோடு ஐந்தைப் பெருக்க ஐந்நூறு ஆயிரவர் என்று முடியும். 'நீளம்...... வைகுதி எனின்' - இரண்டிடத்தும் கூட்டப்பட்டது. 'ஆல்' அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Five times a hundred thousand there are who carry out my command,
  2. hunters with bows, mightier than the gods;
  3. we, your servants, will be saved; if you stay even one day in our huts,
  4. there is no higher life for us than that," he said.

What the poem says

Kukaṉ ends his plea. He commands half a million archers, the number reckoned as five times a hundred, multiplied by a thousand, and he calls them stronger than the gods. They are all at Irāmaṉ's service.

He asks only that Irāmaṉ stay even a single day in their huts. That alone would be salvation for them, and they could hope for no greater fortune.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ai irupattōṭu aintu āyirar uḷar āṇai
ceykunar, cilai vēṭar, tēvariṉ valiyārāl
uykutum aṭiyēm, em kuṭiliṭai oru nāḷ nī
vaikuti eṉiṉ, mēl ōr vāḻvu ilai piṟitu ' eṉṟāṉ.