கம்பராமாயணம் 2062 · அயோத்தியா 6.59

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1சிந்தனை உணர்கிற்பான் , சென்றனன் , விரைவோடு
தந்தனன் நெடுநாவாய் ; தாமரை நயனத்தான்
அந்தணர் தமை எல்லாம் 'அருளுதிர் விடை ' என்னா ,
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா .

பொருள் · Meaning in Tamil

(குகன்) சிந்தனை உணர்கிற்பான் விரைவோடும் சென்றனன் - (இராமனது) மனக்கருத்தை உணர்ந்தவனாய் விரைந்து சென்று; நெடுநாவாய் தந்தனன் - பெரிய மரக்கலங்களைக் கொணர்ந்தான்; தாமரை நயனத்தான் - தாமரை மலர்போலும் கண்களை உடைய இராமன்; அந்தணர் தமை எல்லாம் - முனிவர்கள் எல்லாரையும்; “விடை அருளுதிர்” என்னா - “எனக்குப் புறப்பட விடை கொடுங்கள்” என்று கேட்டுப் பெற்று; இந்துவின் நுதலாளோடு - பிறைமதி போலும் நெற்றியை உடைய சீதையோடும்; இளவலொடு - இலக்குவனோடும்; இனிது ஏறா - இனிமையாக அந்நாவாயில் ஏறி,

சென்றனன் முற்றெச்சம். வடிவில் முற்றுவினையாய் எச்சப்பொருள் தரும் இத்தகையன முன்னும் உள; பின்னும் வரும். பொருள் நோக்கி இலக்கணம் உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who understood his lord's mind went off quickly
  2. and brought a long boat; the lotus-eyed one
  3. said to all the Brahmins, "Grant me leave,"
  4. and with her whose forehead is like the moon, and with his younger brother, gladly boarded.

What the poem says

Understanding that Irāmaṉ's mind is made up, Kukaṉ quickly brings a large boat. Irāmaṉ takes leave of the sages and steps aboard with Cītai, whose forehead is shaped like the crescent moon, and with Ilakkuvaṉ.

The commentary notes a point of grammar: the verb went is finite in form but works like a participle, linking into the next action. The sentence carries on into the following verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cintaṉai uṇarkiṟpāṉ, ceṉṟaṉaṉ, viraivōṭum
tantaṉaṉ neṭu nāvāy; tāmarai nayaṉattāṉ
antaṇartamai ellām 'aruḷutir viṭai ' eṉṉā,
intuviṉ nutalāḷōṭu iḷavaloṭu iṉitu ēṟā.