கம்பராமாயணம் 2063 · அயோத்தியா 6.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இராமனும்) “நனி கடிது விடு” என்றான் - மிக வேகமாக நாவாய்களைச் செலுத்து என்று கூற; மெய் உயிர் அனையானும் - உடம்பும் உயிரும் ஒத்த நண்பினை இராமன்பால் உடைய குகனும்; முரிதிரை நெடு நீர்வாய் - ஒடிகின்ற அலைகளையுடைய நீண்ட கங்கை நீரிடத்தே; நெடு நாவாய் - பெரிய ஓடத்தை; முடுகினன் - விரைந்து செலுத்த; அது கடிதினின் மட அன்னக் கதி செல - அந்நாவாய் விரைவாக இளைய அன்னப்பறவை நீரிற்செல்லுமாறு போலச் செல்ல; நின்றார் மறையோரும் - கரையின்கண் நின்றவர்களாகிய வேதியரும்; இடர் உற - துன்பமடைந்து; எரி உறு மெழுகு ஆனார் - நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள்.
நட்புக்கு உடம்பும் உயிரும் சேர்ந்த சேர்க்கையைச் சொல்வது வழக்கு. ஆதலின், 'மெய் உயிர் அனையானும்' என்று குகன் - இராமனுக்குள்ள நட்பைச் சொன்னார். “உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன, மடந்தையொடு எம்மிடை நட்பு” என்ற குறளையும் (குறள் 1122) காண்க. நாவாய்களின் செல்கை அன்னச்செலவு போலும் என்றார்; பின்னும் 'அன்னப் பேடை சிறை இலதாய்க் கரை, துன்னிற்றென்னவும் வந்தது தோணியே' என்றது (2372.) காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Push off, and quickly," he said; and he who was like body to his soul
- drove the long boat on; over the long water with its breaking waves
- it went swiftly with the gait of a young swan; and those who stood behind,
- the Brahmins too, in their grief became like wax in the fire.
What the poem says
Irāmaṉ tells Kukaṉ to cast off quickly, and Kukaṉ, as close to Irāmaṉ as body to soul, a common image for friendship also used in the Tirukkuṟaḷ, drives the boat swiftly across the breaking waves. It glides like a young swan.
The sages left standing on the bank melt with grief like wax held to a flame as they watch Irāmaṉ go.