கம்பராமாயணம் 2064 · அயோத்தியா 6.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பால் உடை மொழியாளும் - பால்போலும் இன்சொல் உடையவளாகிய சீதையும்; பகலவன் அனையானும் - சூரியனை ஒத்த இராமனும்; சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட - கயல் மீன்களை உடைய நீண்ட புண்ணியக் கங்கை நீரைச் சிதறி எறிந்து விளையாடிக் கொண்டே செல்ல; தோல் உடை நிமிர் கோலின் துழவிட - முன்னர்த் தோல்பட்டையை உடைய நீரைத் தள்ளி மேல் உயரும் துடுப்புகளால் நீரைத் தள்ள; எழு நாவாய் - செல்லுகின்ற தோணி; காலுடை நெடு ஞெண்டின் - கால்களை உடைய பெரிய நண்டைப் போல; கடிது சென்றது - விரைந்து சென்றது.
படகிற் செல்வார் நீர் சிதறி விளையாடல் இயல்பு. துடுப்புகளின் முனையில் இறக்கைகள் போல் தோலைத் தைத்திருப்பர் நீரைத் தள்ளுவதற்கு வசதியாக. துடுப்புகள் கால்களாகவும் நாவாய் நண்டாகவும் காண்க. நண்டு செல்லுங்கால் பக்கங்களில் ஒதுங்கி ஒதுங்கிச் செல்லும். அத்தன்மை நாவாயின் செலவுக்கு ஒப்பாகும் என்க. “அம்மா” வியப்பிடைச்சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She whose speech is sweet as milk and he who is like the sun
- played as they went, splashing the long, good water full of cēl fish;
- as the oars, tipped with leather, rose and pushed at the water, the boat surging on
- went swiftly like a great crab on its legs. Ah!
What the poem says
As they cross, Cītai and Irāmaṉ splash each other playfully with the river water, as people in a boat naturally do.
The boatmen's oars, with leather blades stitched to their ends to push the water better, rise and dip on both sides, so the boat looks like a huge crab scuttling along on its many legs. The final exclamation marks the poet's delight in the picture.