கம்பராமாயணம் 2065 · அயோத்தியா 6.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சாந்து அணி - சந்தனம் அணிந்த; புளினத்தின் தடமுலை - மணல் மேடுகளாகிய பெரிய முலைகளை உடைய; உயர் கங்கை - உயர்ந்த கங்கையானவள்; காந்து இன மணி மின்ன - எரிகின்ற கூட்டமான இரத்தினங்கள் விட்டு விளங்க; கடி கமழ் கமலத்தின் - மணம் வீசுகின்ற தாமரை மலரினால், சேந்து ஒளி விரியும் - சிவந்து ஒளி பரவுகின்ற, தெண் திரை எனும் நிமிர் கையால் - தெளிந்த அலைகள் என்று கூறப்படும் நீண்ட கைகளால்; ஒரு தானே ஏந்தினள் - தான் ஒருத்தியே அந்த ஓடத்தைச் சுமந்தவளாய்; இனிது அப்பால் ஏற்றினள் - இனிமையாக அக்கரையில் கொண்டு சேர்த்தாள்.
புளினம் - மணல் திட்டு. நதிகளுக்கு இடையில் உள்ளவை. மணற்குன்று எனலும் ஆம். அவற்றை நகில்களாக்கிக் கங்கையைப் பெண் ஆக்கினார். நீரலைகளின் மேல் நாவாய் செல்வது கங்கைதான் சுமந்து அக்கரை கொண்டு சேர்ப்பதுபோல் உள்ளது என்றது தற்குறிப்பேற்றம். அலையைக் கையாக்கியதற்கு ஏற்பக் “கடிகமழ் கமலத்தின் சேந்து ஒளிவிரியும்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lofty Gaṅgai, whose great breasts are sandbanks smeared with sandal paste,
- with her glowing clusters of gems flashing, with the red light spreading
- from her fragrant lotuses, with her long, raised hands, the clear waves,
- held them up all by herself and gently set them on the far shore.
What the poem says
The poet imagines the Ganges as a woman: her sandbanks are her breasts, perfumed with sandal paste, gems glitter in her waters, and her clear waves are her outstretched arms, reddened like palms by the lotuses floating on them.
The boat riding the waves to the other side is pictured as the river goddess herself lifting the travellers in her hands and gently placing them on the far bank. This is a poetic fancy that gives an ordinary event an imagined cause.