கம்பராமாயணம் 2067 · அயோத்தியா 6.64

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“நாயேன் - நாய்போற் கடைப்பட்டவனாகிய அடியேன்; உடன் ஏகப் பெறுகுவென் எனின் - உங்களுடனே வருகின்ற பேற்றைப் பெறுவேனானால்; நெறி - நீங்கள் செல்லும் வழியை; இடு நெறி வல்லேன் - அமைத்துத்தரும் வல்லமை உடையேன்; நறியன கனி காயும் நறவு இவை வழுவாமல் நேடினென் தர வல்லேன் - மிகவும் நல்லனவாகிய பழம், காய், தேன் முதலியவற்றைச் சிறிதும் குறைவுபடாமல் தேடிக் கொண்டுவந்து தருதற்கு வலிமை உடையேன்; உறைவிடம் அமைவிப்பேன் - செல்லும் வழியிடங்களில் தங்குதற்குரிய இடங்களை அமைத்துத்தருவேன்; ஒரு நொடி வரை உம்மைப் பிறிதிலென் - ஒரு நொடிக்கால அளவும் உங்களைப் பிரியாமல் பாதுகாப்பேன்.

தான் உடன் வருவதால் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளைச் சொல்லி, தன்னை உடன்கொண்டு செல்ல வேண்டினான் குகன் என்க. குகனது பண்பு முதிர்ச்சியை இங்கே கனி, காய், நறவு, என்றுமட்டுமே கூறி, மீனைக் கூறாது விட்டதிலும் காண்க. “நொடி” என்பது ஒரு கால அளவு. கண்ணிமைப் பொழுது அதற்குச் சமம். “கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை, நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே” என்பது (தொல். எழுத். நூன்.) காண்க. நெறி - பெருவழி, இடுநெறி - ஒற்றையடிப்பாதை, குறுக்குப்பாதை எனவும் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I can clear a path through any path; searching without fail,
  2. I can bring good fruits, green fruits and honey;
  3. I will make you places to stay; not for a moment
  4. will I leave you, if I, your dog, may only go with you."

What the poem says

Kukaṉ begs to be allowed to go with Irāmaṉ into the forest and lists how he could help. He can open up a trail where there is none, find ripe and unripe fruit and wild honey, set up shelters at each halt, and never leave their side even for the blink of an eye.

The commentary again notes his tact: he now offers fruits and honey, foods fit for ascetics, and no longer mentions fish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'neṟi iṭu neṟi vallēṉ; nēṭiṉeṉ vaḻuvāmal
naṟiyaṉa kaṉi kāyum naṟavu ivai tara vallēṉ;
uṟaiviṭam amaivippēṉ; oru noṭi varai ummaip
piṟitileṉ; uṭaṉ ēkap peṟukuveṉ eṉil, nāyēṉ. '