கம்பராமாயணம் 2068 · அயோத்தியா 6.65

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தீயன அவை யாவும் திசைதிசை செல நூறித்
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன் ,
மேயின பொருள் நாடித் தருகுவென் , வினைமற்றும்
ஏயின செய வல்லேன் , இருளினும் நெறி செல்வேன் . '

பொருள் · Meaning in Tamil

“தீயன வகை யாவும் - கொடிய தன்மை படைத்த எப்பொருளும்; திசை திசை செல நூறி - நாலாதிசைகளிலும் ஓடி ஒளியும்படி அழித்து; தூயன உறை கானம் - தூய விலங்கு முதலியன வசிக்கும் காடுகளை; துருவினென் வர வல்லேன் - தேடித் தருவதற்கு வல்லமை உடையேன்; மேயின பொருள் நாடித் தருகுவென் - நீங்கள் விரும்பிய பொருளை எங்கிருப்பினும் தேடிக் கொண்டுவந்து தருவேன்; ஏயின வினை முற்றும் செய வல்லேன் - நீங்கள் ஏவிய எல்லா வேலைகளையும் செய்ய வல்லமை உடையேன்; இருளினும் நெறி செல்வேன் - நள்ளிருள் பொழுதும் காட்டு வழியில் செல்லும் தீரம் உடையேன்.

விலங்கு, பறவை, மரம், செடி, கொடி முதலியவற்றுள் ஊறிழைக்கும் எப்பொருளும் அடங்கத் 'தீயன வகை யாவும்' என்றும், தூயன அனைத்தும் அடங்க, 'தூயன உறைகானம்' என்றும் கூறினான். காட்டில் பழகியவன் ஆகலின் இருளிடையிலும் செல்லுதல் தனக்கு எளிது என்றானாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Driving every kind of harmful thing to flight in all directions,
  2. I can search out and lead you to forests where only gentle things dwell;
  3. I will seek out and bring whatever you desire; I can do every task
  4. you set me; I can find the way even in the dark."

What the poem says

Kukaṉ continues. He would drive off every dangerous creature, whether beast, bird or poisonous plant, and lead them to parts of the forest inhabited only by harmless things.

He would find anything they wished for, carry out any order, and, being at home in the forest, could travel its paths even at night.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tīyaṉa vakai yāvum ticai ticai cela nūṟi
tūyaṉa uṟai kāṉam turuviṉeṉ vara vallēṉ,
mēyiṉa poruḷ nāṭit tarukuveṉ, viṉai muṟṟum
ēyiṉa ceya vallēṉ, iruḷiṉum neṟi celvēṉ. '