கம்பராமாயணம் 2069 · அயோத்தியா 6.66

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“மல்லினும் உயர் தோளாய்! - மற்போர்த் திறமையிலும் மேன்மை பொருந்திய தோள்களை உடைய இராமனே!; மலை கல்லுவென் - (செல்லும் வழி) மலையாயினும் தோண்டி வழிசெய்வேன்; மேலும் கவலையின் முதல் யாவும் (கல்லுவென்) - அதன்மேலும் கவலைக்கிழங்கு முதலிய (உணவு வகைகளையும்) தோண்டி எடுப்பேன்; நெறி தூரம் செல்லுவென் - சேய்மையான வழிகளிலும் செல்வேன்; செறி புனல் தர வல்லேன் - உயிர் செறிதற்குக் காரணமான நீரை எங்கிருந்தும் கொண்டு தருதற்கு உரிய வல்லமை உடையேன்; வில் இனம் உளென் - துணைக்கு வில் ஏந்திய சேனையை உடையேன்; ஒன்றும் வெருவலென் - எதற்கும் அஞ்சமாட்டேன்; இருபோதும் மலர் அடி பிரியேன் - பகல், இரவு ஆகிய இருபொழுதுகளிலும் உன்னுடைய மலர்போன்ற அடிகளைப் பிரியாமல் உடனாகத் தங்கியிருப்பேன்.

'கல்லுவென்' என்பதை மலைக்கும், கவலைக் கிழங்குக்கும் கூட்டி உரைக்க. குறிஞ்சியும் முல்லையும் திரிந்து பாலையாம் ஆதலின் காட்டில் நீரில்லாத இடங்களில் நீர் கொண்டுவந்து தருதற்கும் திறமை உடையவர்கள் இருத்தல் தேவை ஆதலின் அதுவும் என்னால் இயலும் என்றான் குகன். ஆல் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I will dig through mountains, and dig up kavalai roots and every such food;
  2. I will go long distances; I can bring water to keep you alive;
  3. I have a host of bowmen; I fear nothing; by day and by night,
  4. you whose shoulders surpass any wrestler's, I will not leave your flower-like feet."

What the poem says

Kukaṉ promises to cut a way through mountains and dig up edible roots such as the kavalai yam, to travel any distance, and to find water wherever it is scarce. Hill and forest country can dry into wasteland, so someone who can find water there is essential.

With his band of archers he fears nothing, and he vows never to leave Irāmaṉ's side, day or night.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kalluveṉ malai mēlum kavalaiyiṉ mutal yāvum,
celluveṉ neṟi tūram, ceṟi puṉal tara vallēṉ,
vil iṉam uḷeṉ, oṉṟum veruvaleṉ, irupōtum
malliṉum uyar tōḷāy! malar aṭi piriyēṉāl.