கம்பராமாயணம் 2073 · அயோத்தியா 6.70

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் ;
இடர் உறு தகையாயோ ? யான் என உரியாய் நீ ;
சுடர் உறு வடி வேலாய் ! சொல் முறை கடவேன் , நான்
வடதிசை வரும் அ நாள் நின் உழை வருகின்றேன் . '

பொருள் · Meaning in Tamil

“சுடர் உறு வடிவேலாய்! - ஒளி படைத்த கூரிய தீட்டப்பெற்ற வேலை உடைய குகனே; உம்பி கான் உறை பகல் எல்லாம் - உன் தம்பியாகிய இலக்குவன் வனத்தின்கண் நான் வசிக்கும் நாள்கள் எல்லாம்; படர் உற உளன் - (எனக்கு வருத்தம் நேராமல்) தான் அந்த வருத்தத்தைத் தாங்க என்னுடனே இருக்கின்றான்; நீ போய் யான் என உரியாய் - நீ உன் நாட்டிற்குச் சென்று நான் இருக்கும் ஆட்சி உரிமையில் இருந்து ஆட்சி புரிவாயாக; யான் வடதிசை வரும் அந்நாள் - நான் மீண்டு வடதிசை நோக்கி அயோத்திக்கு வரும் அக்காலத்தில்; நின்னுழை வருகின்றேன் - உன் இருப்பிடத்திற்கு வருகின்றேன்; சொல் முறை கடவேன் - சொல்லிய பேச்சிலிருந்து மாற மாட்டேன்.

'யான் என உரியாய்' நானிருக்குமிடத்தில் நீ இருக்க வேண்டும் என்பதற்காக நானே நீ நீயே நான் என்றான் குகனிடம் இராமன். 'பகல்' என்றதாயினும் ஆண்டு என்பதாகக் கொள்க. “எண்ணிய சில நாளில்” (1984) என்பது போல.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Your younger brother is here to bear the hardship all the days I live in the forest;
  2. are you one to be made to suffer? You are entitled to be as I am;
  3. you with the bright, sharp spear! I will not break my word;
  4. on the day I come back north, I will come to you."

What the poem says

Irāmaṉ gently refuses to let Kukaṉ follow him. Ilakkuvaṉ, Kukaṉ's new younger brother, will share the hardships of the forest; there is no need for Kukaṉ to suffer as well.

Kukaṉ is to go home and rule in Irāmaṉ's place, as though he were Irāmaṉ himself. When Irāmaṉ returns north toward Ayōttī at the end of his exile, he promises to visit Kukaṉ, and he will not go back on his word. The exile's years are again spoken of as days.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṭar uṟa uḷaṉ umpi kāṉ uṟai pakal ellām;
iṭar uṟu takaiyāyō? yāṉ eṉa uriyāy nī;
cuṭar uṟu vaṭi vēlāy! col muṟai kaṭavēṉ, yāṉ
vaṭa ticai varum an nāḷ niṉṉuḻai varukiṉṟēṉ. '