கம்பராமாயணம் 2075 · அயோத்தியா 6.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பணி மொழி கடவாதான் - இராமன் இட்ட கட்டளை வார்த்தையை மீறாது; பருவரல் இகவாதான் - இராமனது பிரிவினால் ஏற்பட்ட துன்பமும் நீங்காது; பிணி உடையவன் என்னும் பிரிவினன் - நோயுற்றான் என்று சொல்லும்படியான பிரிவுத் துன்பத்தை உடையனாய்; விடை கொண்டான் - (குகன்) உத்தரவு பெற்றுச் சென்றான்; அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும் - அழகிய ஆபரணங்களை அணிந்த மயில் போல்பவளாகிய சீதையோடும் இராமனும் தம்பி இலக்குவனும்; திணி மரம் நிறை கானில் - வலிய பெரு மரங்கள் நிறைந்துள்ள காட்டில்; சேண் உறு நெறி - நெடுந் தொலையான வழியில்; சென்றார் - சென்றார்கள்.
இராமன் ஆணையை மீறாமல் துன்பத்தைத் தாங்கிக் குகன் செல்ல, மூவரும் காட்டில் நெடுந்தொலை சென்றனர். காட்டின் உள்ளே செல்லச் செல்லப் பெருமரங்கள் செறிந்திருக்கும் ஆதலின் “திணி மரம் நிறை கானில்” எனவே, காட்டின் உள்பகுதியில் செல்வாராயினர் என்பது அறியப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not going against the word of command, yet not escaping his grief,
- sick with parting as one stricken with illness, he took his leave;
- with the peacock-like lady in her fine jewels, the lord and the younger brother
- went far along the path through the forest crowded with dense trees.
What the poem says
Kukaṉ obeys Irāmaṉ's command and takes his leave, though the pain of separation weighs on him like a sickness.
Irāmaṉ, Cītai and Ilakkuvaṉ walk on along the long path into the forest. The mention of dense, crowded trees shows that they are now going deep into the interior of the woods. With this verse the Ganges chapter ends.