கம்பராமாயணம் 2076 · அயோத்தியா 7.1

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பூரியர் புணர் மாதர் பொது மனம் என , மன்னும்
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் ,
ஆரியன் வரலோடும் , அமுது அளவிய சீதக்
கார் உறு குறி வானம் காட்டியது அவண் எங்கும் .

பொருள் · Meaning in Tamil

பூரியர் - அறிவிலராய கீழோர்; புணர் - சேர்கின்ற; மாதர் - விலைமகளிரின்; பொதுமனம் என - எல்லோர்க்கும் பொதுவாகிய மனம்போல; மன்னும் ஈரமும், “உளது இல்” என்று அறிவு அரும் இளவேனில் - பொருந்திய ஈரப்பசையும் உள்ளதோ இல்லதோ என்று அறியமுடியாத (கோடையாகிய) இளவேனிற் காலத்தே; ஆரியன் - இராமன்; வரலோடும் - வன நெறியில் வந்து சேர்ந்த அளவில்; அவண் எங்கும் - அவ்விடம் எல்லாவற்றிலும்; அமுது அளவிய - அமுதம் கலந்த; சீதம் - குளிர்ச்சியான; கார் உறு குறி - மேகம் வருகின்ற அடையாளத்தை; மான - பெருமை உற; காட்டியது - காண்பித்தது.

இராமன் காட்டுக்கு வந்ததனால் காட்டின் வெப்பம் தணிந்து மழை வருவதற்கான அடையாளங்கள் தோன்றத் தொடங்கின என்றவாறாம். பொருட் பெண்டிர் மனம் வெளிக்கு அன்புள்ளது போல - அதாவது ஈரம் உள்ளது போலக் காட்டி, உள்ளே பொருளின்மேல் ஆசை தங்கி இருக்கும். அதுபோலவே இக் காடும் முதுவேனில்போல் வறட்சி உடையதாகவும் இல்லாமல், துளிர்விட்டு ஈரம் உள்ளது போலவும் உண்மையில் ஈரம் அற்றதாகவும் இளவேனிற் காலத்தில் உள்ளது என்றவாறாகும். “பொன் விலைப் பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே” (353) தாடகை வதைப் படலத்துப் பாலையின் தன்மையை முன்னரும் இவ் உவமையால் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the early summer, when one cannot tell whether any lasting moisture remains,
  2. as with the common heart of women who give themselves to base men,
  3. as soon as the noble one arrived, all around that place there appeared,
  4. grandly, the cool signs of coming rain, mingled with nectar.

What the poem says

The chapter on entering the forest begins. It is early summer, when the land seems neither fully parched nor truly moist. The poet compares it to the heart of a woman who sells her love: it shows a surface of feeling but has no real tenderness within. He used the same comparison earlier for the desert in the episode of Tāṭakai.

The moment Irāmaṉ enters the forest, the heat eases and cool, refreshing signs of approaching rain appear everywhere, as if nature itself welcomed him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pūriyar puṇar mātar potu maṉam eṉa, maṉṉum
īramum uḷatu il eṉṟu aṟivu arum iḷavēṉil,
āriyaṉ varalōṭum, amutu aḷaviya cītak
kār uṟu kuṟi māṉak kāṭṭiyatu avaṇ eṅkum.