கம்பராமாயணம் 2077 · அயோத்தியா 7.2

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெயில் - சூரியன்; விரி கதிர் - விரிந்த தன் கிரணங்களை; இள நிலவே போல் இடைவீச - இளமையான நிலவொளி போலத் தண்மையாக இடையிடையே வீசவும்; பயில் மரம் - (வனத்தில்) நெருங்கியுள்ள மரங்கள்; நிழல் ஈன - நிழலைத் தரவும்; மேகப் புயல் - மேக மழை; பனி புரை துளி தர - பனியை யொத்த குளிர்ந்த சிறிய துளிகளைத் தரவும்; இளமென் கால் - இளைய மெல்லிய தென்றற்காற்று; பூ அளவியது எய்த - பூக்களின் நறுமணங்களோடு கலந்து வந்து அடையவும்; மயில் இனம் நடம் ஆடும் - மயிற்கூட்டங்கள் நடனம் ஆடுகின்ற; இனியன வழி - இனிமையாகிய வழிகளில்; போனார் - மூவரும் சென்றார்கள்.

வெயிலொளி நிலவொளிபோல வீசுதல், மரம் நிழல் தருதல், மேகம் சிறுநீர்த் திவலை சிந்தல், தென்றல் பூமணத்தோடு வீசுதல், மயில்கள் நடனம் ஆடுதல் ஆகியவற்றால் இவர்கள் செல்லும் வழிகள் களைப்புத் தராது இனியனவாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the sun casting its spreading rays here and there like young moonlight,
  2. with the close-set trees giving shade, with the rain clouds
  3. sending drops like dew, and a gentle young breeze arriving mingled with flowers,
  4. they went along pleasant paths where flocks of peacocks danced.

What the poem says

The forest road is made easy for the travellers. The sun's rays break through the canopy only here and there and feel as gentle as moonlight; the crowded trees give shade; the clouds let fall drops as fine and cool as dew; a soft southern breeze carries the scent of flowers; and peacocks dance along the way.

Because of all this the walk tires them not at all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veyil iḷa nilavēpōl viri katir iṭai vīca
payil maram niḻal īṉap paṉi purai tuḷi mēkap
puyal tara, iḷa meṉkāl pū! aḷaviyatu eyta,
mayiliṉam naṭam āṭum vaḻi iṉiyaṉa pōṉār