கம்பராமாயணம் 2079 · அயோத்தியா 7.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பூண் இயல் - அணிகளை இயல்பாக உடையவளே!; களி மயில் - களிப்பு நிறைந்த மயில்கள்; இள மிஞிறு பாண் ஆக - இளைய வண்டு பாட்டுப் பாடும் பாணன் ஆகவும்; படு மழை - பொழிகின்ற மழையின் ஒலி; பணை ஆக - பறை ஒலியாகவும் கொண்டு; நாணின - வெட்கமுற்றனவாய்; தொகுபீலி - சுருக்கிக் கொண்ட தம் தோகைகளை; கோலின - விரித்து வளைத்தனவாய்; நடம் ஆடல் - நடனம் ஆடுதல், நின சாயல் பொலிவது - உன்னுடைய சாயல் தம்மிடத்தே விளங்குவதை, பல கண்ணின் - தம்முடைய தோகையில் உள்ள பல கண்களால்; காணிய - காண்பதற்கு; எனல் ஆகும் - என்று சொல்லலாம்படியுள்ள; இவை - இக் காட்சிகளை; காணாய் -.
தோகை சுருங்கி இருக்குங்கால் அதில் உள்ள கண்கள் வெளித் தோன்றா; விரித்தவழி கண்கள் தோன்றும் ஆதலின், ஆடும் மயில் தம் தோகைக் கண்களால் பிராட்டியின் சாயல் தம்மிடத்தே பொருந்தியுள்ளமையைப் பார்ப்பது போலும் என்று கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "With young bees as their singers and the falling rain as their drum,
- the peacocks, abashed, spread wide the trains they had folded and dance,
- you whose nature is to wear jewels! as if to see with their many eyes
- whether your grace shines in them; look at these joyful peacocks!"
What the poem says
Irāmaṉ shows Cītai the peacocks dancing, with humming bees for singers and the patter of rain for drums. They had kept their tails folded, ashamed because Cītai's grace surpasses theirs.
Now they spread them out, and the many eye-spots on the feathers appear, as if the birds were opening all those eyes to check whether her grace can be found in them.