கம்பராமாயணம் 2080 · அயோத்தியா 7.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கவின் ஆரும் - அழகு பொருந்திய; மாந்தளிர் நறுமேனி மங்கை - மாந்தளிர் போன்ற மணமும் நிறமும் கூடிய மேனியை உடைய சீதையே!; சேந்து ஒளி விரி - சிவந்து ஒளி விரிக்கின்ற; செவ்வாய் - சிவந்த வாயினை உடைய; பைங்கிளி - பசிய கிளி; கோலம் செறி - அழகு பொருந்திய; காந்தளின் மலர் ஏறிக் கோதுவ - காந்தள் மலரின்மேல் ஏறி அம் மலரைக் கோதுகின்றவை; நின் மணி முன்கை ஏந்தின எனல் ஆகும் இயல்பின - நின்னுடைய அழகிய முன்கையில் ஏந்திக் கொண்டிருக்கின்றதாகச் சொல்லப்பெறும் இயல்பினை உடைய; இவை - இக் காட்சிகளை; காணாய் -.
காந்தள் மலர் மகளிர் கைபோலும் ஆதலின் அம்மலர்மேல் ஏறி அம் மலரைக் கோதுகின்ற கிளி, பிராட்டியின் முன் கைமேல் ஏறி அமர்ந்துள்ளது போல் காட்சி அளிப்பதாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Green parrots with red beaks glowing bright
- climb onto the lovely kāntaḷ flowers and peck at them;
- lady whose fragrant body is like a tender mango leaf! they are just as if
- they were perched on your jewelled forearm; look at these!"
What the poem says
Irāmaṉ points out green parrots perched on kāntaḷ (glory lily) blossoms, pecking at the petals.
In Tamil poetry the kāntaḷ flower is the standard comparison for a woman's hand, so the parrots seem to be sitting on Cītai's own hand, as pet parrots do. Cītai's body is likened to the reddish young leaves of the mango tree, admired for their colour and fragrance.