கம்பராமாயணம் 2083 · அயோத்தியா 7.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருந்ததி அனையாளே! - அருந்ததியை ஒத்தவளே!; அமுதினும் இனியாளே! - அமிழ்தத்தைக் காட்டிலும் இனியவளே! செருந்தியின் மலர் தாங்கும் - செருந்தி மலரைத் தாங்கிக்கொண்டுள்ள; செறி இதழ் - நெருங்கிய இதழ்களை உடைய; வனசோகம் - காட்டின் கண் உள்ள அசோகம் ஆனது; பொருந்தின களி வண்டின் பொலிவன - தம்மிடத்தே பொருந்தினவாய களிப்பு நிறைந்த வண்டுகளாற் பொலிவனவாகிய அவை; பொன்னூதும் இருந்தையின் - பொன்னை வைத்து ஊதுகின்ற பொற்கொல்லனது கரியில்; எழு தீ ஒத்து எழுவன இயல் - மேல் எழுந்து எரிகின்ற நெருப்பை ஒத்துத் தோன்றுகின்ற ஓர் தன்மையை, காணாய் -.
செருந்திப் பூ பொன்னாகவும் அதைத் தாங்கிய அசோக மலர் நெருப்பாகவும், அதனைச் சுற்றியுள்ள வண்டுகள் கரியாகவும் உவமை கொள்க. இருந்தை - கரி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You who are like Aruntati! You who are sweeter than nectar!
- The forest aśoka with its close-set petals, holding up the blossoms of the ceruntu,
- and gleaming with the joyful bees that cling to it, rises up
- like fire leaping from the charcoal on which gold is blown; look at it!"
What the poem says
Irāmaṉ addresses Cītai as like Aruntati, the star who in Indian tradition is the model of the faithful wife. He shows her an aśoka tree with red blossoms among which yellow ceruntu flowers are tangled, while dark bees swarm over them.
The sight is like a goldsmith's furnace: the yellow flowers are the gold, the red aśoka blossoms the leaping flames, and the black bees the charcoal.