கம்பராமாயணம் 2084 · அயோத்தியா 7.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏந்து இளமுலையாளே! - (சாயாது) மேல் நிமிர்ந்துள்ள இளமையான அழகிய முலையினை உடையாளே!; எழுத அரு எழிலாளே - ஓவியத்தில் எழுதுதற்கரிய அழகு படைத்தவளே!; ஒரு களி மஞ்ஞை - மயங்கிய ஒரு மயில், காந்தளின் முகை கண்ணின் கண்டு - காந்தள் அரும்பைத் தன் கண்ணால் பார்த்து; இது பாந்தள் என உன்னி - இது பாம்பு என்று கருதி; கவ்வியபடி பாரா - கவ்விக் கொண்ட தன்மையைப் பார்த்து; தேம் தளவுகள் - தேன் பொருந்திய முல்லை அரும்புகள்; செய்யும் சிறு குறு நகை - செய்கின்ற எள்ளும் புன்சிரிப்பினை; காணாய் -.
காந்தள் முகையைப் பாம்பு என்று மயில் கவர, அது கண்டு முல்லை சிரிப்பதாகக் கூறியது. முல்லை அரும்புகள் பற்களைப் போலும் ஆதலின் அம்முல்லை அரும்புகள் தோன்றிய காட்சியைச் சிரிப்பதாகத் தற்குறிப்பேற்றம் செய்தார். சிறு குறு நகை - சிறு என்பது இகழ்ச்சியையும், குறு என்பது புன் சிரிப்பு என்பதனையும் அறிவிக்க வந்தன. களி மஞ்ஞை என்றது போதை மிகுதியால் காந்தள் முகையைப் பாம்பென மயங்கியது எனக் காரணம் கூறியவாறாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You with young, upraised breasts! You whose beauty no painter could draw!
- A giddy peacock saw a kāntaḷ bud with its eyes
- and, thinking 'This is a snake,' snapped it up; seeing that,
- the honeyed jasmine buds smile a small, mocking smile; look!"
What the poem says
A peacock, dazed with pleasure, mistakes a curled kāntaḷ bud for a snake, the peacock's natural prey, and snatches it in its beak.
Nearby, white jasmine buds, which in Tamil poetry stand for teeth, seem to be smiling at the bird's foolish mistake. The poet gives the flowers a feeling of their own, a favourite figure in his descriptions.