கம்பராமாயணம் 2085 · அயோத்தியா 7.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குன்று உறை வயமாவின் குருளையும் - மலையில் வாழும் வலிமை உள்ள புலியின் குட்டியும்; இருள் சிந்திப் பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் - இருள் கீழே சிதறிப் பின்னிக் கொண்டது என்னும்படியுள்ள கரிய பெண் யானை ஈன்ற சிறிய யானைக் குட்டியும்; அண்டர்தம் - இடையர்களது; மனை - வீட்டில் உள்ள; ஆவின் கன்றொடு - பசுக் கன்றோடு; அன்றில - மாறுபடாதனவாய்; களியன - களிப்புடையனவாய், விளையாடும் பல - விளையாடுகின்ற பல உயிரினங்களையும்; காணாய் -.
கரிய பிடி இருள் பின்னிப் பிணைந்திருத்தல் போலும். பிடி மண்ணில் உள்ளதாதலின் வானத்தில் பரவிய இருள் பூமியில் சிந்திப் பின்னியது போல என்றார். முனிவர் உறைவிடம் ஆதலின் இவை தம்முள் பகை இலவாய் விளையாடின என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The cub of the strong tiger that lives on the hill,
- and the little calf born of a cow elephant, who seems like darkness spilled down and knotted together,
- without quarrelling, together with the calves of the cows
- from the herdsmen's houses, play joyfully; look at them all!"
What the poem says
Irāmaṉ shows Cītai a tiger cub and a baby elephant playing happily with the calves of the herdsmen's cattle. The elephant's mother is so black she looks like the darkness of the sky fallen to earth and twisted into a solid shape.
Natural enemies play together without hostility because this is country where sages live, and the peace of their holiness extends even to the animals.