கம்பராமாயணம் 2087 · அயோத்தியா 7.12

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'முற்றுறும் முகை கிண்டி முரல்கில சிறு தும்பி ,
வில் திரு நுதல் மாதே ! அம் மலர் விரி கோங்கின்
சுற்று உறும் மலர் ஏறித் துயில்வன சுடர் மின்னும்
பொன் தகடு உறும் நீலம் புரைவன பல காணாய் . '

பொருள் · Meaning in Tamil

வில் திரு நுதல் மாதே! - வில்லைப் போன்ற அழகிய நெற்றியை உடைய பெண்ணே!; சில தும்பி - சில வண்டுகள்; அம் மலர் விரி கோங்கின் - அழகிய மலர்கள் விரிந்துள்ள கோங்க மரத்தினது; முற்றுறு முகை கிண்டி - முற்றிய அரும்புகளைக் குடைந்து (தேன் உண்டு); முரல்கில - பாடாதனவாம்; சுற்று உறு மலர் ஏறி - வட்டமாகப் பொருந்திய மலரில் ஏறி; துயில்வன பல - உறங்குகின்றன பலவும்; சுடர் மின்னும் - ஒளிவிட்டு விளங்குகின்ற; பொன் தகடு உறு - பொன் தகட்டில் பொருந்திய; நீலம் புரைவன - நீல மணியை ஒத்துள்ளனவற்றை; காணாய்.

முற்றுறு முகை - மலரும் பருவத்தரும்பு. அதனையே தேனீக்கள் குடைதல் இயல்பு. கோங்கமலர் பொன்னிறம் படைத்தது. கோங்க மலரில் உறங்கும் வண்டு பொன்னில் பதித்த நீலமணிபோல் உள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Some bees, having burrowed into the ripe buds, no longer hum;
  2. lady with the lovely bow-shaped forehead! on the kōṅku tree with its beautiful open flowers
  3. they have climbed onto the round blossoms and sleep there,
  4. many of them, like sapphires set in a gleaming plate of gold; look!"

What the poem says

Bees have dug into the kōṅku buds that are just about to open, drunk their fill of nectar and fallen silent. Now they lie asleep on the open golden kōṅku flowers.

Each dark bee resting on a yellow blossom looks like a blue sapphire set in a shining sheet of gold.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muṟṟuṟu mukai kiṇṭi muralkila cila tumpi,
vil tiru nutal mātē! am malar viri kōṅkiṉ
cuṟṟu uṟu malar ēṟit tuyilvaṉa cuṭar miṉṉum
poṉ takaṭu uṟu nīlam puraivaṉa pala kāṇāy. '