கம்பராமாயணம் 2090 · அயோத்தியா 7.15

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மணம் கிளர் மலர் வாரும் மாருதம் வர , வாசக்
கணம் கிளர்தரு சுண்ணம் கல் இடையன கானம் அத்து ,
அணங்கினும் இனியாய் ! உன் அணி வடம் முலை முன்றில்
சுணங்கு இனம் அவை மானத் துறுவன பல காணாய் . '

பொருள் · Meaning in Tamil

அணங்கினும் இனியாய்! - தெய்வப் பெண்களைக் காட்டிலும் இனியவளே; உன் அணிவடமுலை முன்றில் சுணங்கினம் அவை மான - உன்னுடைய முத்துவடம் அணிந்த முலைப் பரப்பில் உள்ள தேமல் திரளைப்போல; வாச மாருதம் வர வீச - வாசனை பொருந்திய தென்றற்காற்று மிக வீச; மணம் கிளர் மலர் - மணம் மிக்கு விளங்கும் மலர்களின்; கணம் கிளர்தரு சுண்ணம் - கூட்டமாக எழும்பிய மகரந்தப் பொடிகள்; கானத்து - காட்டில்; கல் இடையன - பாறைகளின் இடையில் உள்ளனவாய்; துறுவன அவை - நெருக்கமாகச் சிந்திக் கிடப்பனவற்றை; காணாய் -.

மகரந்தப் பொடிக்குத் தேமலை உவமை யாக்கினார். முலைப்பரப்பில் தேமல் போலப் பாறைப்பரப்பில் சுண்ணம் நெருங்கிக் கிடப்பன என்று கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "As the fragrant breeze blows strongly, the pollen of richly scented flowers
  2. rises in clouds and settles among the rocks of the forest;
  3. you who are sweeter than a goddess! like the golden freckles
  4. on your bosom adorned with strings of pearls, it lies thick there; look!"

What the poem says

A strong scented breeze lifts clouds of golden pollen from the flowers and scatters it thickly over the flat rocks of the forest.

Irāmaṉ compares the pollen-dusted rock to Cītai's bosom with its golden freckles, cuṇaṅku, a pale spotting that Tamil poetry counts among a young woman's beauties.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṇam kiḷar malar vāca mārutam vara vīca
kaṇam kiḷartaru cuṇṇam kalliṭaiyaṉa kāṉattu,
aṇaṅkiṉum iṉiyāy! uṉ aṇi vaṭa mulai muṉṟil
cuṇaṅkiṉam avai māṉat tuṟuvaṉa avai kāṇāy. '