கம்பராமாயணம் 2092 · அயோத்தியா 7.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாள் புரை விழியாய்! - வாளை ஒத்த கண்களை உடையவளே!; உன் மலர் அடி அணிமான - உன்னுடைய மலர் போன்ற பாதங்களில் அணிந்துள்ள அணிகலனை ஒப்ப; தாள் புரை தளிர் வைகும் - உன் அடியை ஒத்த தளிரிலே தங்கியுள்ள; தகை ஞிமிறு - அழகுடைய வண்டுகளாகிய; இவை காணாய் -; கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை - கொள்ளும் குற்றம் உடைய இருள் கொண்டதும் வாசனை பொருந்தியதுமான கூந்தலைப் போல உள்ள மழை மேகத்தை, காணாய் -; தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை - (உன்) தோளை ஒத்த இளமையான மூங்கிலின் தொகுதிகளாகிய அவற்றை; காணாய் -.
அடிபோன்ற தளிரில் அமர்ந்துள்ள வண்டுகள், மலர் போன்ற அடியில் அணிந்த அணிகலன் போன்றனவாம். எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டு மறைக்கும் தன்மை உடையது ஆதலின், 'கோள்புரை இருள்' என்றார். புரை - குற்றம். வாள் புரை விழி, மலர் அடி - உவமையணி. தாள் புரை தளிர், குழல் புரை மழை, தோள் புரை வேய் - எதிர்நிலை யுவமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You whose eyes are like swords! Look at these lovely bees resting
- on the young leaves that are like your feet, like the ornaments on your flower-soft feet!
- Look at the rain cloud that is like your fragrant hair, dark as all-swallowing night!
- Look at those clumps of young bamboo that are like your shoulders!"
What the poem says
Irāmaṉ finds Cītai's beauty everywhere in the forest. Bees sitting on red young leaves look like the anklets on her feet, since the leaves themselves resemble her feet. The dark rain cloud is like her black, perfumed hair, dark as the night that hides everything in itself. Young bamboo shoots are like her smooth, rounded shoulders.
The commentary notes that here the comparison is reversed: instead of her features being likened to nature, the forest is likened to her.