கம்பராமாயணம் 2093 · அயோத்தியா 7.18

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

மான் இனம் - மான் கூட்டங்கள்; மயில் மாலை - மயில் வரிசைகள்; குயில் இனம் - குயில் தொகுதிகள்; வதி - சஞ்சரிக்கின்ற; கானம் - இந்தக் காடானது; பூ நனை சினை துன்றி - பூவும் அரும்பும் உடைய கிளைகள் நெருங்கப்பெற்று; நால் நிற நளிர் வல்லிக் கொடி - பலவகை நிறமுள்ள குளிர்ந்த வல்லியென்னும் கொடிகள்; நவை இல பல்கி - குற்றம் இல்லாதன நிரம்பப் பெற்று; தீ நிகர் - நெருப்பை ஒத்த; தொழில் - சித்திரத் தொழில் செய்யப் பெற்ற; ஆடைத் திரை - திரைச் சீலையை; பொருவன - ஒத்திருப்பனவற்றை; பாராய் -.

பூங்கொடி, பறவை, பன்னிறக் கொடிகள் நிரம்பியிருத்தலின் காடு வண்ண வேலைப்பாடமைந்த திரைச் சீலையை ஒத்தது என்க. “வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச்செய்கைப் படாஅம் போர்த்ததுவே, ஒப்பத் தோன்றிய உவவனம்” (மணி. 3:167 -169) என்ற வரிகளை இதனோடு ஒப்புநோக்குக. “தீ” என்பது புத்தி என்னும் பொருள்படும் வடசொல்லாகக் கொண்டு கூறுவார் உளர். அது 'நிகர்' என்னும் உவமைச் சொல்லோடு ஏலாமை அறிக. பெரிதும் செந்நிறம் படைத்த கானம் “தீ” நிகர்ந்தது எனலே பொருந்துவதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "With branches crowded with flowers and buds, with birds thronging here and there,
  2. with flawless cool creepers of many colours spreading thickly,
  3. this forest, where herds of deer, rows of peacocks and flocks of cuckoos dwell,
  4. is like a cloth curtain worked with fire-bright designs; look!"

What the poem says

The whole forest, with its blossoming branches, birds of every kind, creepers of many colours, and deer, peacocks and cuckoos, looks like a curtain embroidered with brilliant pictures. A similar image appears in the Maṇimēkalai, where a garden looks as if draped with a painted cloth.

The commentary rejects a reading that takes fire-bright as a Sanskrit word for intellect, since that would not fit the comparison. The forest, ablaze with red, is like fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pū naṉai ciṉai tuṉṟip puḷ iṭai iṭai pampi,
nāl niṟa naḷir vallik koṭi navai ila palki,
māṉ iṉam mayil mālaik kuyil iṉam vati kāṉam,
tī nikar toḻil āṭait tirai poruvaṉa pārāy! '