கம்பராமாயணம் 2095 · அயோத்தியா 7.20

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1அருத்தியன் அகம் விம்மும் அன்பினன் , 'நெடும் நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று ' எனல் தெரிகின்றான் ,
பரத்துவன் எனும் நாமப் பரம் முனி பவம் நோயின்
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் .

பொருள் · Meaning in Tamil

பரத்துவன் எனும் நாமம் பரமுனி - பரத்துவாசன் என்னும் பெயரை உடைய மேலான முனிவன்; அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் - மகிழ்ச்சியினால் மனம் பூரிக்கின்ற அன்புடையவனாய், “நெடு நாளில் திருத்திய வினை இன்று முற்றிற்று” எனல் தெரிகின்றான் - நீண்டநாளாக ஒழுங்குறச் செய்த தவம் இப்பொழுது பயனைத் தரும் நிலை அடைந்தது என்று நன்றாக ஆராய்ந்தறிகின்றவனாய்; பல நோயின் மருத்துவன் அனையானை - பிறவிப் பிணிக்கு மருத்துவனாக உள்ளவன்போல உள்ள இராமனை; வரவு எதிர் கொள வந்தான் - வருகையை வரவேற்க வந்தான்.

பரம் - மேல்; பரமுனி - மேலான முனி; யாவரினும் மேம்பட்ட முனிவன். “பவ நோயின் மருத்துவன்” என்பதனை, “எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும், ஒருத்தரும் இப்பிறவி யென்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை, மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா மறுபிறவி தவிரத், திருத்தி உன் கோயில் கடைபுகப் பெய்” (திவ்ய. 457.) என்பதை ஒப்புநோக்கி அறிக. இராமன் தன்னை அவதாரத்தால் மனிதனாக அறியினும் முனிவர்கள் அவனைப் பரம்பொருளாக உணர்தலின், 'நெடுநாளில் திருத்திய வினை இன்று முற்றிற்று' என்று பரத்துவாசன் கூறி மகிழ்ந்தானாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Full of longing, with love swelling in his heart, knowing for certain
  2. "The work I have shaped over long years has today come to fruition,"
  3. the supreme sage named Paratuvaṉ came out to welcome
  4. the one who is like a physician for the disease of births.

What the poem says

The great sage Paratuvācaṉ (Bharadvāja) comes out joyfully to greet Irāmaṉ. He feels that the austerities he has practised for so long have at last borne fruit, since the one they were meant to reach has come to him.

Irāmaṉ is called the physician who cures the disease of rebirth, an image also found in a hymn of Periyāḻvār. Though Irāmaṉ thinks of himself as a man, the sages recognise him as the Supreme Being.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruttiyaṉ akam vimmum aṉpiṉaṉ, 'neṭu nāḷil
tiruttiya viṉai muṟṟiṟṟu iṉṟu ' eṉal terikiṉṟāṉ,
parattuvaṉ eṉum nāmam para muṉi pala nōyiṉ
maruttuvaṉ aṉaiyāṉai varavu etirkoḷa vantāṉ.