கம்பராமாயணம் 2104 · அயோத்தியா 7.29

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1வைகினர் ; கதிர் நாறும் அளவையின் மறையோனும் ,
'உய்குவென் இவனொடு யான் உடன் உறைதலின் ' என்பான் .
செய்தனன் இனிது எல்லாம் , செல்வனை முகம் முன்னாக்
'கொய் குலம் மலர் மார்ப ! கூறுவது உளது ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

வைகினர் - (மூவரும்) தங்கினர்; கதிர் நாறும் அளவையின் - சூரியன் தோன்றும் வைகறைப் போதின்கண்; மறையோனும் - பரத்துவாச முனிவனும்; இவனோடு யாம் உடன் உறைதலின் உய்குவெம்” என்பான் - 'இவ் இராமனோடு யாம் சேரத் தங்கப்பெறுதலின் நற்கதி பெறுவோம்' என்று கருதுபவனாய்; எல்லாம் இனிது செய்தனன் - இராமனுக்கு வேண்டுவ எல்லாம் இனிமையாகச் செய்து; செல்வனை முகம் முன்னா - இராமனை முகம் நோக்கி; “கொய் குல மலர் மார்ப! - கொய்த கூட்டமான மலர்களை அணிந்த மார்பினை உடையாய்!; கூறுவது உளது” - (உன்னிடத்தில்) யான் கூற வேண்டுவது உளது; என்றான் -.

முன்னுதல் - கருதுதல் என்னும் பொருள் பெறும். இங்கு “நோக்கி” என்றதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They stayed the night; when the sun's rays spread, the sage,
  2. thinking, 'We shall be saved by living here together with him,'
  3. did everything for them with kindness, and turning his face to the prince,
  4. said, 'O you whose chest bears clusters of plucked flowers! I have something to say.'

What the poem says

The three guests spend the night in the hermitage. At dawn the sage, convinced that having Irāmaṉ live beside him would bring him salvation, looks after all their needs and then turns to Irāmaṉ with a request.

The garland of freshly plucked flowers on Irāmaṉ's chest is a conventional mark of a hero or prince.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaikiṉar; katir nāṟum aḷavaiyiṉ maṟaiyōṉum,
'uykuvem ivaṉoṭu yām uṭaṉ uṟaitaliṉ ' eṉpāṉ.
ceytaṉaṉ iṉitu ellām, celvaṉai mukam muṉṉā
'koy kula malar mārpa! kūṟuvatu uḷatu ' eṉṟāṉ.