கம்பராமாயணம் 2105 · அயோத்தியா 7.30

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“நிறையும் நீர் - நீர் நிரம்பியுள்ளது; மலர் நெடுங்கனி, கிழங்கு, காய் கிடந்த - பூக்களும், பெரும்பழங்களும், கிழங்குகளும், காய்களும் உள்ளன; தீயவை குறையும் - தீவினைகளும் போய்விடும்; தூயவை குறைவு இல - நற்செயல்களுக்கு யாதொரு குறைவும் இல்லை; இவ் வழி - இவ்விடத்தில், எம்மொடு உறையும் - எம்மோடு நீங்களும் வசியுங்கள்; ஒருங்கினில் உயர்தவம் முயல்வார்க்கு - மன ஒருமையால் மிக உயர்ந்த தவத்தைச் செய்கின்றவர்களுக்கு; இறையும் - தங்குதற்கு இடம்; ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது” - இதுவல்லாமல் இனிமையான வேறு ஓர் இடம் கிடைத்தல் அரிதாகும்; இன்னும் - மேலும்...

தவம் செய்வார்க்கு உணவு வகைகள், மலர், நீர் முதலியன நிரம்பியிருத்தல், தீச்செயல்களுக்கு இடமின்மை, நற்செயல் விளைதல், மன ஒருமைக்கு வேண்டிய அமைதிச் சூழல் இத்தனையும் கூடியிருத்தலின் இது மிகச் சிறந்த இடம் என்றான் முனிவன். இறுத்தல் - தங்குதல்; இறை - தங்கும் இடம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Water is plentiful; flowers, great fruits, roots and green fruit lie at hand;
  2. evil things dwindle here, and pure things know no lack; stay with us
  3. in this place; for those who strive together at lofty penance
  4. there is no sweeter place to dwell than this; and more besides—

What the poem says

The sage begs Irāmaṉ to make his home in the hermitage, listing its advantages for a life of austerity: plenty of water, flowers, fruits and roots for food, no room for evil and every opportunity for good, and the calm needed for a focused mind.

The verse ends "and more besides", leading into the next verse, where he adds the holiness of the place itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'niṟaiyum nīr malar neṭuṅ kaṉi kiḻaṅku kāy kiṭanta;
kuṟaiyum tīyavai; tūyavai kuṟaivu ila; emmōṭu
uṟaiyum iv vaḻi, oruṅkiṉil uyar tavam muyalvārkku
iṟaiyum ītu alātu, iṉiyatu ōr iṭam aritu; iṉṉum.