கம்பராமாயணம் 2106 · அயோத்தியா 7.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“கங்கையாளொடு - கங்கா நதியுடனே; கரியவள் - யமுனையும்; நாமகள் - சரஸ்வதி நதியும்; கலந்த - கூடிய; சங்கம் - கூடல் (பிரயாகை); ஆதலின் - ஆகையால்; பிரியலென் - இதை விட்டு நீங்காமல் இருக்கின்றேன்; தாமரைச் செங்கண் அம் கண் நாயக! - தாமரை போலும் சிவந்த கண்களைப் பெற்றுள்ள அருளுடைய இராமனே; அயனுக்கும் - பிரம தேவனுக்கும்; அரும் பெறல் தீர்த்தம் - கிடைத்தற்கரிய (புண்ணிய) தீர்த்தமாகும்; எங்கள் போலியர் தரத்தது அன்று - எம்போன்ற முனிவர்களது தன்மையில் அடங்குவது அன்று இதன் பெருமை; ஈண்டு இருத்திர் - இங்கேயே நீங்களும் இருப்பீர்களாக; ' என்றான் -.
கங்கையும் யமுனையும் கட்புலனுக்கு எட்டாமல் சரசுவதி நதியும் கூடிய திரிவேணி சங்கமம் என்னும் பிரயாகை விசேட தீர்த்தமாகும். தீர்த்த மகிமை கூறி இராமனைத் தங்க வேண்டினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Because this is the confluence where the dark one and the goddess of speech join Kaṅkai,
- I never leave it; O gracious lord with eyes red as the lotus,
- it is a holy ford hard to reach even for Ayaṉ;
- its greatness is beyond the measure of such as we are; stay here,' he said.
What the poem says
The sage continues his plea. His hermitage stands at Prayāga, the sacred meeting of three rivers: the Gaṅgā, the dark Yamunā ("the dark one"), and the Sarasvatī ("the goddess of speech"), which joins them unseen, beneath the surface.
So holy is this confluence that even Ayaṉ (Brahmā) finds it hard to reach, and its worth is beyond what ascetics like himself can describe. On the strength of this he asks Irāmaṉ to stay.