கம்பராமாயணம் 2107 · அயோத்தியா 7.32

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1பூண்ட மாதவன் அ மொழி விரும்பினன் புகல ,
'நீண்டது அன்று இது , நிறை புனல் நாட்டுக்கு நடு ஆம் ;
மாண்ட சிந்தைய ! இவ் வழி வைகுவென் என்றால் ,
ஈண்ட யாவரும் நெருங்குவர் ' என்றனன் , இராமன் .

பொருள் · Meaning in Tamil

பூண்ட மாதவன் - மேற்கொண்ட தவத்தை உடைய பரத்துவாசன்; அம்மொழி - மேற் சொல்லிய வார்த்தைகளை; விரும்பினன் புகல - அன்பொடு கூற; இராமன் நெடுநாள் மாண்ட சிந்தைய! - நீண்ட நாளாகத் தவத்தின் மேற்சென்ற பெருமை பெற்ற மனத்தினை உடைய முனிவ!; இது - இந்த இடம்; நிறை புனல் நாட்டுக்கு - நிறைந்த நீர்வளம் உடைய எனது கோசல நாட்டுக்கு, நீண்டது அன்று - நெடுந்தொலைவில் உள்ளது அன்று; இவ் வழி - இவ் விடத்தில்; வைகுவென் என்றால் - தங்கியிருப்பேனாயின்; யாவரும் - கோசல நாட்டு மக்கள் யாவரும்; ஈண்ட - விரைவாக; நெருங்குவர் - என்னை வந்து அடைந்துவிடுவார்கள்; ' என்றனன் -.

நாட்டுக்கு மிக அருகில் தங்கினால் நாட்டு மக்கள் அடிக்கடி வருவர்; ஆதலின் அது தன் தவத்திற்கும் இடையூறாகும்; முனிவர்களின் கடமைகளுக்கும் இடையூறாகும் என்று புலப்படுத்தி மறுத்தான் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the great ascetic, steadfast in penance, spoke those words with longing,
  2. 'This place is not far from my land of brimming waters;
  3. O you whose mind has grown great through long years! If I stay here,
  4. everyone will soon come crowding in,' said Irāmaṉ.

What the poem says

Irāmaṉ gently declines. The hermitage is too close to his own kingdom of Kōcalam; if he stayed, the people would keep coming to see him.

That would disturb his own life of austerity and also the sages' duties, so he refuses without having to say it bluntly.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pūṇṭa mā tavaṉ am moḻi virumpiṉaṉ pukala,
'nīṇṭatu aṉṟu itu, niṟai puṉal nāṭṭukku neṭu nāḷ;
māṇṭa cintaiya! iv vaḻi vaikuveṉ eṉṟāl,
īṇṭa yāvarum neruṅkuvar ' eṉṟaṉaṉ, irāmaṉ.