கம்பராமாயணம் 2109 · அயோத்தியா 7.34

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று காதலின் ஏயினன் ; அடி தொழுது , ஏகிக்
கொன்றை அம் குழல் கோவலர் முல்லையும் குறுகிச்
சென்று , செம் கதிர் செல்வனும் நடு உறச் சிறு மான்
கன்று நின்று உகள் கரை உடை காளிந்தி கண்டார் .

பொருள் · Meaning in Tamil

என்று காதலின் ஏயினன் - என்று கூறி அன்போடு (அவர்களை வழியனுப்பின) முனிவனுடைய; அடி தொழுது ஏத்தி - திருவடிகளை வணங்கித் துதித்து; (மூவரும் வழிக் கொண்டு); கொன்றை வேய்ங் குழல் கோவலர் முல்லை - கொன்றை, மூங்கில் ஆகியவற்றால் ஆகிய குழலை உடைய இடையர்களது முல்லை நிலத்தையும்; அம் குடுமி - அழகிய மலைச் சிகரத்தையும்; சென்று - கடந்து போய்; செங்கதிர்ச் செல்வனும் நடு உற - செந்நிறமான கதிர்களை உடைய சூரியனும் உச்சியை அடைய (நண்பகற் போதில்); சிறுமான் கன்று - சிறிய மான்குட்டி; நீர் நுகர் - தண்ணீர் அருந்துகின்ற; காளிந்தி எனும் நதி கண்டார் - யமுனை என்னும் நதியினைக் கண்டார்கள்.

“அம் குடுமி சென்று செங்கதிர்ச் செல்வனும் நடுஉற ' என்பதனை, சூரியனும் அழகிய உச்சி நடுவைச் சென்று அடைய எனப்பொருள் உரைத்தலும் ஒன்று. கோவலர் கொன்றை, மூங்கில் முதலியவற்றால் குழல் செய்து ஊதுவர் நீண்ட கொன்றைப் பழத்தைத் துருவித் துளையிட்டுக் குழல் செய்தல் வழக்கமாம். காளிந்தி - யமுனையின் மறுபெயர், கருமை நிறம் உடையது என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So he bade them with love; they bowed at his feet and praised him,
  2. and crossing the pastures of herdsmen with flutes of koṉṟai and bamboo, and the lovely peak,
  3. they went on; and when the lord of red rays reached mid-heaven, they saw
  4. the river called Kāḷindī, where little fawns drink the water.

What the poem says

Sent off with the sage's blessing, the three cross the herders' pastureland and a hill and reach the Yamunā, here called by its other name Kāḷindī, "the dark one", at noon.

The herdsmen's flutes are made from bamboo or from the long pod of the koṉṟai (Indian laburnum), hollowed out and pierced with holes. Some read the second line differently: the sun, having climbed the lovely summit of the sky, stands at its centre.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu kātaliṉ ēyiṉaṉ; aṭi toḻutu, ētti
koṉṟai vēyṅ kuḻal kōvalar mullai am kuṭumi
ceṉṟu, ceṅ katirc celvaṉum naṭu uṟac ciṟu māṉ
kaṉṟu nīrnukar kāḷinti eṉum nati kaṇṭār.