கம்பராமாயணம் 2110 · அயோத்தியா 7.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீறு தோய் மணிமேனியர் - வழி நடந்ததால் புழுதி படிந்த அழகிய உடம்பினை உடையவர்; ஆறு கண்டனர் - யமுனை யாற்றைக் கண்டு; அகம் மகிழ்ந்து - மன மகிழ்ச்சி அடைந்து; இறைஞ்சினர் - வணங்கி; அறிந்து - செய்ய வேண்டிய கடன் முறைகளை உணர்ந்து; நெடும்புனல் படிந்தார் - மிக்க நீரிலே மூழ்கி எழுந்து; கிழங்கினோடு ஊறு மென்கனி உண்டு - கிழங்குடனே சுவை மிகுதியுள்ள மெல்லிய பழங்களையும் உண்டு; நீர் உண்டார் - தண்ணீர் பருகினர்; “ஏறி ஏகுவது எங்ஙனம்” என்றலும் - 'யாற்றைக் கடந்து அக்கரை செல்வது எவ்வாறு? ' என்று இராமன் கூறுதலும்; இளையோன் - இலக்குவன்
யமுனை யாற்றில் நண்பகல் நீர்மூழ்கி வழிபாடு செய்து உணவு கொண்டு நீர் உண்டவர் யாற்றைக் கடந்து அக்கரை செல்வது எவ்வாறு என்று சிந்தித்த அளவில் இலக்குவன் பின்வருமாறு செய்தான் என அடுத்த பாட்டில் முடியும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They saw the river, rejoiced at heart and bowed, and knowing their rites,
- they whose jewel-fair bodies were thick with dust bathed in the broad stream,
- ate tender, juicy fruits with roots, and drank water;
- and when he asked, 'How shall we cross and go on?', the younger one—
What the poem says
Dusty from the road, the three reach the Yamunā at midday. They bow to the river, bathe, perform their rites, eat fruits and roots, and drink.
Then Irāmaṉ wonders aloud how they will get across. The sentence breaks off at "the younger one", Ilakkuvaṉ, whose answer, in deeds rather than words, follows in the next verse.