கம்பராமாயணம் 2111 · அயோத்தியா 7.36

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாங்கு வெம் கழை துணித்தனன் , மாணையின் கொடியால்
ஒங்கு தெப்பம் ஒன்று அமைத்து , அதின் , உம்பரின் உலம்போல்
வீங்கு தோள் அண்ணல் தேவியொடு இனிது வீற்றிருப்ப ,
நீங்கினன் அந்த நெடும் நதி இரு கையால் நீந்தி .

பொருள் · Meaning in Tamil

(இளையோன்) வாங்கு வேய்ங்கழை துணித்தனன் - வளையும் தன்மையுள்ள மூங்கிற்கழிகளை வெட்டி; மாணையின் கொடியால் - மாணைக் கொடிகளைக் கொண்டு; ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து - உயர்ந்த தெப்பம் ஒன்றைக் கட்டி; அதன் உம்பரில் - அதன்மேல்; உலம் போல் வீங்கு தோள் அண்ணல் - திரண்டு உருண்ட கல்லைப் போலப் பருத்த தோள்களை உடைய இராமன்; தேவியொடு இனிது வீற்றிருப்ப - சீதாபிராட்டியுடனே இனிமையாகத் தங்கியிருப்ப; அந்த நெடு நதி - அந்தப் பெரிய யமுனை நதியை; இருகையால் நீந்தி - தன் இரு கையாலும் நீந்தி; நீங்கினான் - கடந்தான்.

தெப்பத்தைத் தள்ள வேண்டும் ஆதலின் இலக்குவன் அது செய்தான் என்பார் நீந்திக் கடந்தான் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He cut down supple bamboo canes, and with māṇai creepers
  2. built a sturdy raft; and on it, while the lord with shoulders swelling like rounded boulders
  3. sat at ease with his queen,
  4. he crossed that great river, swimming with his two arms.

What the poem says

Ilakkuvaṉ solves the problem himself. He cuts bamboo, lashes it together with māṇai creepers into a raft, and seats Irāmaṉ and Cītai on it.

Then he swims across the wide Yamunā, pushing the raft ahead of him with his arms.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṅku vēyṅ kaḻai tuṇittaṉaṉ, māṇaiyiṉ koṭiyāl
ōṅku teppam oṉṟu amaittu, atiṉ, umpariṉ ulampōl
vīṅku tōḷ aṇṇal tēviyoṭu iṉitu vīṟṟiruppa,
nīṅkiṉāṉ anta neṭu nati iru kaiyāl nīnti.