கம்பராமாயணம் 2112 · அயோத்தியா 7.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆலை பாய் வயல் - கரும்பாலையிலிருந்து கருப்பஞ்சாறு பாய்கின்ற வயல்களை உடைய; அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் - அயோத்திநகரத்தில் உள்ளார்க்கு ஆண்களிற் சிறந்தவனாகிய இராமனுக்குத் தம்பியாய இலக்குவன்; மாலை மால்வரைத் தோள் எனும் மந்தரம் திரிய - மாலை அணிந்த பெரிய மலை போன்ற தோளாகிய மந்தரமலையானது மாறி மாறி நீரைத் தள்ள; கழிந்த நீர் - கையால் தள்ளப்பட்ட நீரானது; காலை வேலையைக் கடிதின் கடந்தது - சூரியன் உதிக்கும் காலைக் கடலாகிய கீழ்க்கடலை விரைவாகக் கடந்து அப்பால் சென்றது; மீண்ட நீர் வெள்ளம் - தெப்பத்தால் மீண்டு சென்ற நீர்ப்பெருக்கு; கடிதின் மேலை வேலையின் பாய்ந்தது - விரைவாக மேற்குத் திசையில் உள்ள கடலிற் பாய்ந்து சென்றது.
கையால் தள்ளிய நீர் கீழ்க்கடலைக் கடக்க, தெப்பத்தால் விடுபட்ட நீர் மேற்கடலை அடைந்தது என்றவாறாம். 'கடிதின்' என்பதனை இரண்டுக்கும் கூட்டுக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the younger brother of the manly hero of the Ayōtti folk, whose fields run with juice from the cane presses,
- churned the water with his garlanded shoulders, huge as mountains, like Mantaram whirling,
- the water he thrust away passed beyond the morning sea; and swiftly
- the flood of water driven back surged into the western sea.
What the poem says
A playful exaggeration of Ilakkuvaṉ's strength as he swims. His shoulders, likened to Mount Mantaram, which churned the ocean of milk in myth, drive the water so hard that what he pushes forward rushes past the eastern sea.
The water thrust back by the raft races all the way to the western sea. "Swiftly" applies to both halves of the image.