கம்பராமாயணம் 2113 · அயோத்தியா 7.38

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புனையும் வற்கலைப் பொற்பினர் - அணிந்து கொண்டுள்ள மரவுரியாலாகிய அழகிய ஆடையுடைய அவர்கள்; அனையர் - அப்படிப்பட்டவர்களாய், அப்புனல் ஏறினர் - அந்த யமுனை நீரைக் கடந்தார்; அக்கரை அணைந்தார் - எதிர்க்கரையைச் சென்றடைந்தார்கள்; நெடு நெறி போனார் - நீண்ட வழியைக் கடந்து சென்று; சினையும் மூலமும் முகடும் வெந்து - கிளைகளும் வேரும், உச்சியும் தீய்ந்து; இரு நிலம் தீய்ந்து - பெரிய நிலம் கருகி; நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடுஞ் சுரம் - நினைக்கின்ற மனமும் சுடுவதாகிய ஒரு பெரிய பாலை நிலத்தை; நேர்ந்தார் - அடைந்தார்கள். “வற்கலைப் பொற்பினர் அனையர்” எனக் கூட்டினும் அமையும். மூலம் என்பது கிழங்கு, அது வேரின்கண் உள்ளது; ஆதலின் வேர் என உரைக்கப்பட்டது. முகடு - மரத்தினது உச்சி, பூ, தளிர் காய், கனி இவை உள்ள பகுதியாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thus they crossed that water and reached the further bank;
  2. fair in the bark garments they wore, they went on a long road,
  3. and came to a vast wasteland where branch, root and crown were burnt and the broad earth scorched,
  4. one that sears even the heart that thinks of it.

What the poem says

Safely across the Yamunā, the three travellers in their bark garments walk a long way and enter a parched desert tract (pālai).

Every tree there is burnt, branches, roots and crown alike; the crown is where the flowers, shoots and fruits grow. The heat is so fierce that merely thinking about the place burns the mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyar ap puṉal ēṟiṉar, akkarai aṇaintār,
puṉaiyum vaṟkalaip poṟpiṉar, neṭu neṟi pōṉār,
ciṉaiyum mūlamum mukaṭum ventu iru nilam tīyntu
niṉaiyum neñcamum cuṭuvatu ōr neṭuñ curam nērntār.