கம்பராமாயணம் 2114 · அயோத்தியா 7.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அண்ணலும் - இராமனும்; “சனகி - சீதை; நீங்கல் - இந்தக் காட்டைக் கடத்தற்கு; ஆற்றலள்” - வல்லமை உடையவளல்லள்; என்று-; நினைந்தான் - (நினைந்த அளவிலேயே); ஓங்கு வெய்யவன் - வெப்பத்தால் உயர்ந்த சூரியன்; உடுபதி என - விண்மீன்களுக்குத் தலைவனான சந்திரனே என்னும்படி; கதிர் உகுத்தான் - தன் ஒளியைத் தண்மையாகச் சிந்தினான்; வெம் தாங்கு கடத்து - வெம்மையைத் தாங்கியுள்ள காட்டில், உலவைகள் - காய்ந்து போன மரங்கள்; தழை கொண்டு தழைத்த - தழை உடையவாய்த் தழைத்தன; வெங்கனல் பாங்கு - கொடிய நெருப்புப் போன்ற பக்கங்கள் எல்லாம்; பங்கய வனங்களாய்ப் பரந்த - தாமரைக்காடாகப் பரவின.
பிராட்டியின் மென்மை கருதியும் பாலையின் வெம்மை கருதியும் இராமன் நினைத்தானாக, பாலை சோலையாக மாறியது என்றார். இது முன்னர்த் தாடகை வதைப்படலத்துக் கோசிக முனிவன் இராமலக்குவர்கள் பாலை வெம்மையைத் தாங்கும் பொருட்டு இரு மந்திரங்களை அவர்களுக்கு உபதேசித்தான் என்று கூறலாலும், நினைத்த அளவில் அங்கும் 'கொழுங்கனல் எரியும் வெஞ்சுரம், தெள்ளு தண் புனலிடைச் சேறல் ஒத்தது (8.57.) என்று கூறலானும் அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The noble one thought, 'Caṉaki cannot bear to cross this,'
- and the blazing sun on high shed its rays as though it were the lord of the stars;
- in that heat-bound forest the withered trees burst into leaf;
- the stretches of fierce fire spread out as lotus groves!
What the poem says
The moment Irāmaṉ thinks that the delicate Cītai cannot endure the desert, nature answers his thought. The scorching sun shines as gently as the moon, dead trees burst into leaf, and the burning ground becomes beds of lotus.
The commentary links this to an earlier episode, when the sage Kōcikaṉ (Vicuvāmittiraṉ) taught the princes two mantras against the heat of the wilderness. There too, as soon as they thought of them, the fiery desert felt like wading through cool, clear water.