கம்பராமாயணம் 2115 · அயோத்தியா 7.40

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள் ,
பறித்து வித்திய மலர் எனக் குளிர்ந்தன பசைந்த ;
இறுத்து எரிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற ;
கறுத்த வாள் அரவு எயிறு இன் ஊடு அமுது உகக் களித்த ,

பொருள் · Meaning in Tamil

வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள் - நெருப்பில் வறுத்து விதைக்கப்பட்டன போன்ற கொடிய கூர்மையான பரற்கற்கள்; பறித்து வித்திய மலர் எனக் குளிர்ந்தன - பிடுங்கி விதைத்த மலர்களைப் போலக் குளிர்ச்சி அடைந்தன; பசைந்த - ஈரம் உடையவாயின; இறுத்து எறிந்தன வல்லிகள் - ஒடிக்கப்பட்டு எறியப்பட்ட கொடிகள்; இளந் தளிர் ஈன்ற - இளமையான தளிரைத் தந்தன; கறுத்த வாள் அரவு - சீறிய கொடிய பாம்பு; எயிற்றினூடு அமுது உகக் களித்த - பற்களின் இடையே இருந்து அமுதம் சிந்தச் சீற்றம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தன.

பரற்கற்கள் மலராக, காய்ந்த கொடிகள் தளிர் ஈன, பாம்பு நஞ்சு தராமல் அமுதம் சிந்த இவ்வாறு பாலை மாறியது என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hard, sharp pebbles, like seeds roasted in fire and then sown,
  2. grew cool and moist like plucked flowers strewn on the ground;
  3. creepers that had been snapped and flung aside put forth young shoots;
  4. angry, deadly snakes grew glad, with nectar dripping from between their fangs.

What the poem says

The transformation of the desert continues. Pebbles as hot as roasted seed turn cool and soft as scattered flowers, broken and dried-up creepers sprout new leaves.

Even the venomous snakes lose their anger: instead of poison, nectar drips from their fangs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṟuttu vittiya aṉaiyaṉa val ayil paralkaḷ,
paṟittu vittiya malar eṉak kuḷirntaṉa pacainta;
iṟuttu eṟintaṉa vallikaḷ iḷan taḷir īṉṟa;
kaṟutta vāḷ aravu eyiṟṟiṉūṭu amutu ukak kaḷitta,