கம்பராமாயணம் 2118 · அயோத்தியா 7.43

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1படர்ந்து எழுந்த புல் , பசும் நிறம் கம்பளம் பரப்பிக்
கிடந்த போன்றன ; கேகயம் , தோகைகள் கிளர ,
மடந்தைமார் என நாடகம் வயின் தொறும் நவின்ற ;
தொடர்ந்து பாணரில் பாங்கு இசை முரன்றன தும்பி .

பொருள் · Meaning in Tamil

படர்ந்து எழுந்த புல் - தரைமீது பரவித் தோன்றிய புற்கள், பசுநிறக் கம்பளம் பரப்பிக் கிடந்த போன்றன - பச்சை நிறக் கம்பளம் ஒன்றை விரித்துப்போட்டாற் போல இருந்தன; கேகயம் - மயில்கள்; தோகைகள் கிளர - பீலிகள் அசைய; மடந்தைமார் என - பெண்களைப் போல; வயின் தொறும் - பக்கங்களில் எல்லாம்; நாடகம் நவின்ற - நடனம் பழகின; தும்பி - வண்டுகள்; தொடர்ந்து - (மயிலின் நடனத்தைத்) தொடர்ந்து; பாணரின் - இசைப் பாணர்களைப் போல; பாங்கு இசை முரன்றன - இதமான இசையை ஒலித்தன.

பச்சைக் கம்பளம் பரப்பினதுபோல் புற்கள் படர்ந்துள்ளன. மயில் நடனம் ஆட,

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The grass that spread and sprang up looked like a green blanket
  2. laid out on the ground; the peacocks, their plumes astir,
  3. danced in every place like young women;
  4. and close behind, like minstrels, the bees hummed sweet music.

What the poem says

The desert, now cooled, has become as lush as pastureland. New grass covers the ground like a green carpet.

On this stage the peacocks spread their tails and dance like young women, while the bees, like the bards (pāṇar) who accompany dancers, hum the music.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭarntu eḻunta pul, pacu niṟak kampaḷam parappik
kiṭanta pōṉṟaṉa; kēkayam, tōkaikaḷ kiḷara,
maṭantaimār eṉa nāṭakam vayiṉtoṟum naviṉṟa;
toṭarntu pāṇariṉ pāṅku icai muraṉṟaṉa tumpi.