கம்பராமாயணம் 2119 · அயோத்தியா 7.44

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காலம் இன்றியும் கனிந்தன கனி ; நெடுங் கந்தம்
மூலம் இன்றியும் முகிழ்த்தன ; நிலன் உற முழுதும்
கோல மங்கையர் ஒத்தன கொம்பர்கள் ; இம்பர்ச்
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளது ஓ ?

பொருள் · Meaning in Tamil

கனி - பழங்கள்; காலம் இன்றியும் - தாம் பழுக்க வேண்டிய காலம் இல்லாத போதும்; கனிந்தன - பழுத்தன; நெடுங் கந்தம் - பெரிய கிழங்குகள்; மூலம் இன்றியும் - தாம் தோன்றுதற்குரிய வேர் இல்லாமலும்; நிலன் உற முழுதும் முகிழ்த்தன - மண்ணில் பொருந்த முழுதும் தோன்றின; கொம்பர்கள் - பூங்கொம்புகள்; கோல மங்கையர் ஒத்தன - அழகுடைய பெண்களை ஒத்தவையாய்ப் பூத்து விளங்கின; இன்பச் சீலம் அன்றியும் செய்தவம் வேறும் ஒன்று உளதோ? - இன்பத்தைத் தருதற்குரிய நல் ஒழுக்கமே அல்லாமல் செய்யக் கூடிய தவம் வேறு ஒன்றும் இருக்கின்றதா?

பாலை வெம்மை மாறியதற்குக் காரணம் இராமலக்குவர்களது சீலமே அன்றி வேறில்லை. நல்லொழுக்கம் உடையார்க்கு எல்லாம் வாய்க்கும் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fruits ripened even out of season; great tubers
  2. sprang up even without roots, all over the ground;
  3. the flowering boughs were like lovely women; apart from a life of goodness
  4. that brings joy, is there any other penance worth doing?

What the poem says

Nature keeps outdoing itself: fruit ripens out of season, tubers appear without roots, and the flowering branches look like beautiful women.

The poet's closing question gives the reason. The desert's heat turned to bounty only because of the princes' virtue. Good conduct is the truest austerity, and everything comes to those who live it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kālam iṉṟiyum kaṉintaṉa kaṉi; neṭuṅ kantam
mūlam iṉṟiyum mukiḻttaṉa; nilaṉ uṟa muḻutum
kōla maṅkaiyar ottaṉa komparkaḷ; iṉpac
cīlam aṉṟiyum cey tavam vēṟum oṉṟu uḷatō?