கம்பராமாயணம் 2120 · அயோத்தியா 7.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எயினர் தங்கு இடம் - வேடர்கள் தங்கும் குறிச்சிகள்; இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த - தவமுனிவர்களது தவச்சாலையைப் போல ஆயின; வயின் வயின்தொறும் - பக்க இடங்களில் எல்லாம்; மணி நிறக் கோபங்கள் மலர்ந்த - செம்மணி போன்ற நிறமுடைய இந்திர கோபப் பூச்சிகள் தோன்றின; பயில் மரம் தொறும் - நெருங்கியுள்ள மரங்களில் எல்லாம்; பிரிந்தன பேடையைப் பயிலும் - தம்மைப் பிரிந்து இரங்கினவாய பெண்குயில்களை அழைக்கின்ற; குயில் - ஆண்குயில்கள்; இரங்கின - இரங்கிக்கூவின; குருந்தம் - குருந்த மரங்கள்; முருந்தம் - மயிலிறகின் அடிபோல; நின்று அரும்பின - அரும்புகளைத் தந்தன.
முருந்து - மயிலிறகின் அடி. அது குருந்த மரத்து அரும்புக்கு உவமை. பயிரும் என்றிருத்தல் சிறப்பு; சங்க நூல்களில் இதுவே சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hunters' settlements became like the dwellings of seers;
- in place after place the ruby-red cochineal insects bloomed;
- on every crowded tree the cuckoos cried, calling to the mates
- they had parted from; the kuruntam trees budded like the quills of peacock feathers.
What the poem says
The landscape now takes on the marks of the rainy season of the pastoral tract (mullai). Even the hunters' camps feel as peaceful as hermitages, and the bright red "Indra's cowherd" insects that appear after rain dot the ground like rubies.
Male cuckoos call to their separated mates, and the kuruntam trees put out buds that look like the white bases of peacock quills. The commentary notes that the older Caṅkam word for a mating call is payirum.