கம்பராமாயணம் 2121 · அயோத்தியா 7.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவ்வனம் - அந்தக் காடு; பந்த ஞாட்பு உறு - பிணிப்புடைய போர்க்களத்தில் பொருந்திய; பாசறை - பாசறைக் கண்ணும்; பொருள் வயின் - பொருளைத் தேடும் இடத்தும்; பருவம் தந்த - பிரிந்து சென்று “இன்ன காலத்தில் வருவேன்' என்று காலம் குறித்துச் சென்ற; கேள்வரை - தம் கணவரை; உயிர் உறத் தழுவினர் பிரிந்த - முன்பு உயிர் பொருந்தத் தழுவியவராய்ப் பிரிந்து இருக்கின்ற; கந்த ஓதியர் - மணம் வீசும் கூந்தலை உடைய மகளிர்; சிந்தையின் - மனம்போலக்; கொதிப்பது - கொதிக்கும் தன்மை வாய்ந்தது; (இப்போது) அக் கழலோர் வந்த போது - அந்த வீரக் கழலை அணிந்த (பிரிந்து சென்ற) காதலர் மீண்டு வந்த போது; அவர் மனம் எனக் குளிர்ந்தது - அந்த மகளிர் மனம் போலக் குளிர்ச்சி அடைந்தது.
பாலையின் வெம்மைக்குப் பிரிந்த மகளிரின் உள்ளக் கொதிப்பையும், குளிர்ச்சிக்குக் கூடிய மகளிரின் உள்ளத் தண்மையையும் உவமைப்படுத்தினார். வெப்பக் கொடுமையால் முல்லை திரிந்து பாலையாகும் என்ற புலனெறி, இங்கே பாலை திரிந்து முல்லையானதாக வடிவுகொண்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the hearts of women whose husbands named a season and left, for the camp of the binding battlefield or in quest of wealth,
- women who had held them close as life itself and then were parted,
- women with fragrant tresses, it had burned; and as, when those anklet-wearing heroes
- come back, their hearts grow cool, so that forest grew cool.
What the poem says
A comparison drawn from classical Tamil love poetry. The forest had burned like the heart of a wife whose husband has gone to war or to earn wealth, promising to return by a certain season.
Now it has turned cool, like her heart when the hero, wearing the warrior's anklet, comes home. In the old poetic convention, fierce heat turns pastureland (mullai) into desert (pālai); here the poet reverses it, and desert turns back into pastureland.