கம்பராமாயணம் 2122 · அயோத்தியா 7.47

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெளிறு நீங்கிய பாலையை மெல் எனப் போனார் ,
ஒளிறு வான் மதிக் குழவி தன் சூல் வயிற்று உதைப்பப்
பிளிறும் மேகத்தைப் பிடியெனப் பெரும் பனைத் தட கை
களிறு நீட்டும் அச் சித்திரகூடத்தைக் கண்டார் .

பொருள் · Meaning in Tamil

வெளிறு நீங்கிய பாலையை - (அம் மூவரும்) குற்றம் நீங்கிய அப்பாலை நிலத்தை, மெல்லெனப் போனார் - மெல்லக் கடந்து சென்றார்கள்; குளிறும் வான் - ஒலிக்கின்ற விண்ணிலே உள்ள; மதிக் குழவி - சந்திரனாகிய குழந்தை (இளஞ்சந்திரன்); தன் சூல் வயிற்று ஒளிப்ப - தன்னுடைய நீர்க்கருப்பம் உற்ற வயிற்றிலே மறைந்து கொள்ள; பிளிறு மேகத்தை - இடிக்கின்ற மேகத்தை; பிடி என - பெண் யானை எனக் கருத; களிறு - ஆண் யானையானது; பெரும் பனைத் தடக்கை - தன்னுடைய பெரிய பனைமரம் போன்ற நீண்ட கையை, நீட்டும் - (வானத்தை நோக்கி) நீட்டுகின்றதாகிய; சித்திர கூடத்தைக் கண்டார் - சித்திரகூட மலையைக் கண்டார்கள்.

பாலையின் குற்றம் வெம்மையாம். அஃது இப்போது இல்லை ஆதலின் “வெளிறு நீங்கிய பாலை' ஆயிற்று. பிறைமதி மறைந்த கார் மேகத்தைத் தன் சூலுற்ற பிடி என்று கருதி ஆண் யானை கைநீட்டும் என்று சித்திரகூட மலையின் வளமும் உயர்ச்சியும் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Slowly they passed through the wasteland, now freed of its fault,
  2. and, where the young moon of the sky hides in the cloud's rain-heavy belly,
  3. taking that thundering cloud for his mate and raising his great palm-like trunk,
  4. the bull elephant reaches up: such was the Cittirakūṭam they beheld.

What the poem says

The three cross the desert, its only fault, the heat, now gone, and come in sight of the hill of Cittirakūṭam. This verse closes the canto of the entry into the forest.

The hill's height and richness are shown in one image. A rain cloud swallows the crescent moon and looks like a pregnant cow elephant, and a bull elephant on the summit reaches up to it with his trunk, long as a palm trunk.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veḷiṟu nīṅkiya pālaiyai melleṉap pōṉār,
kuḷirum vāṉ matik kuḻavi taṉ cūl vayiṟṟu oḷippa
piḷiṟu mēkattaip piṭi eṉap perum paṉait taṭakkai
kaḷiṟu nīṭṭum ac cittira kūṭattaik kaṇṭār.