கம்பராமாயணம் 2123 · அயோத்தியா 8.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நினையும் - (எல்லாராலும்) நன்கு மதிக்கப்படுகின்ற; தேவர்க்கும் - தேவர்களுக்கும்; நமக்கும் - சாமானியர்களாகிய நமக்கும்; ஒத்து - ஒரு தன்மைப்பட்டு; ஒரு நெறி நின்ற - சம நிலையில் நிற்கின்ற; அனகன் - குற்றம் இல்லாதவனும்; அம்கணன் - அழகிய (அருளால் நிறைந்த) கண்களை உடையவனும், ஆயிரம் பெயர் உடை அமலன் - ஆயிரம் திருநாமங்களைப் பெற்றுள்ள இயல்பாகவே பாசங்களில் நீங்கியவனும் ஆகிய இராமன்; சனகன் மா மடமயிற்கு - சனகன் மகளாகிய பெருமையுடைய இளமை வாய்ந்த மயில் போலும் சாயலள் ஆகிய சீதைக்கு; சந்தனம் செறிந்த - சந்தன மரங்கள் நெருங்கியுள்ள; அந்தக் கனக மால் வரை - அந்தப் பொன் மயமான பெரிய சித்திரகூட மலையினது; இயல்பு எலாம் - தன்மை நலங்கள் எல்லாவற்றையும்; தெரிவு உற - விளங்கும்படி; காட்டும் - காண்பிப்பான் ஆயினன்.
“நினையும் ' என்பதற்கு எப்பொழுதும் தன்னையே நினைந்து கொண்டுள்ள என்று பொருள் கோடல் சிறப்பு. தன்னை இடையறாது நினையும் நித்யசூரிகளாய தேவர்களுக்கும், எப்பொழுதும் நினையாது ஒரோவழி நினையும் மக்களாகிய நமக்கும் தனது சில குணத்தாலே ஒரு நீர்மையுடையவனாய் நித்ய விபூதியிலும் லீலா விபூதியிலும் இன்பம் ஆர்ந்து இருக்கச் செய்கின்ற பெருநிலை நோக்கி, “நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து” என்றார். 'நினையும் தேவர்' என்றது நித்ய சூரிகளை ஆம், எப்பொழுதும் இறைவனை நினைதலே தமது வாழ்வாக உடையர் அவராதலின், “என்னும் நம்மாழ்வார் திருவிருத்தத்துள் (21) விண்ணோர்கள் என்றவிடத்து “நித்ய சூரிகள்' என்று பொருள் உரைத்தவாறும் காண்க. இவ்வுலகத்துத் திருவவதாரத்தில் மனிதர்களைப் போல இன்ப துன்பம் உடையவனாய் இயங்கினும் என்றும் எங்கும் எவற்றாலும் பற்றப்படாத அவனது பரத்துவத்தை விளக்கவே “அனகன்”, 'அமலன்' என்று கூறினார். அம்கண் - அழகிய கண். அருளுடைய கண் என்றவாறாம். “கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்” என்றார் வள்ளுவரும். (குறள். 575.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The faultless one, who keeps one path alike for the gods who think on him and for us,
- the lovely-eyed, the stainless one of a thousand names,
- showed clearly to Caṉakaṉ's daughter, his great young peahen,
- all the nature of that great golden mountain thick with sandal trees.
What the poem says
The canto of Cittirakūṭam opens. Irāmaṉ, Ilakkuvaṉ and Cītai have arrived at the hill, and Irāmaṉ begins to show Cītai its natural beauties.
The poet frames Irāmaṉ as the supreme god. He treats the eternal beings who meditate on him without pause and ordinary people who remember him only now and then with the same grace. The "thousand names" recall the thousand names of Viṣṇu. "Faultless" and "stainless" stress that, though he lives as a man with joys and sorrows, nothing truly touches him. His "lovely eyes" are eyes full of grace, recalling Vaḷḷuvar's line that kindness is the true ornament of the eye (Kuṟaḷ 575).