கம்பராமாயணம் 2124 · அயோத்தியா 8.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே! - வாளையும் வேலையும் ஒன்றுசேர்த்து ஒன்றனுள் ஒன்றைக் கலந்து வைத்தாற் போன்ற கண்களை உடைய மயில் போன்ற சாயலை உடையவளே! தாளின் - அடிப் பகுதியில்; ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல் - ஏலக் கொடியும் மணம் உள்ள பச்சிலைக் கொடியும் பற்றிக் கிடக்கின்ற மலைப் பக்கத்தே; நீள மாலைய - நீண்ட இயல்பினை உடையவாய்; துயில்வன - உறங்குகின்றனவாகிய நீர் உண்ட கமம் சூல் - நீரை உண்ட நிறைந்த கருப்பத்தை உடைய காள மேகமும் - கரிய மேகமும்; நாகமும் - யானைகளும்; தெரிகில - வேற்றுமை உணரமுடியாது ஒன்றுபோலவே உள்ளன; காணாய் - இவற்றைப் பார்ப்பாயாக.
மலைச்சாரலில் படிந்துள்ள நீருண்ட கரிய மேகங்களும், அங்கே உறங்கும் யானைகளும் வேற்றுமை தெரியா வண்ணம் கிடக்கின்ற வியப்பினைச் சீதைக்குக் காட்டிக்கூறினான் இராமன். அளாயின - கலந்த. அளவளாவுதல்' என்னும் வழக்கும் இப்பொருளினதே. ஏலம், தமாலம் கொடி வகைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O peahen whose eyes are like a sword and a spear laid together!
- On the slopes where cardamom and tamālam twine about the foot of the hill,
- lying long and fast asleep, the black clouds, full-bellied with the water they have drunk,
- and the elephants cannot be told apart: look!
What the poem says
Irāmaṉ points out the first wonder to Cītai, whom he addresses as a peahen whose eyes are sharp as sword and spear together.
Dark rain clouds settle low on the slopes, among cardamom and tamālam creepers, and elephants sleep there too. The two are so alike in colour and bulk that one cannot tell cloud from elephant.