கம்பராமாயணம் 2125 · அயோத்தியா 8.3

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குருதி வாள் எனச் செம் வரி பரந்த கண் குயிலே !
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை ,
சுருதி போல் தெளி மரகதக் கொழுஞ்சுடர் சுற்றப் ,
பருதி வானவன் பசும் பரி புரைவன பாராய் !

பொருள் · Meaning in Tamil

குருதி வாள் எனச் செவ் அரி பரந்த கண் குயிலே! - இரத்தம் தோய்ந்த வாள்போலச் சிவந்த இரேகைகள் படரப் பெற்ற கண்களையுடைய குயில் போலும் குரலுடையாளே!; மால்வரை உம்பரில் மருவி - பெரிய மலையின் உச்சியில் பொருந்தி; குதிக்கின்ற வருடை - குதிக்கின்ற மலை ஆடு; சுருதி போல் தெளி மரகதக் கொழும் சுடர் சுற்ற - வேதம் போலத் தெளிந்து விளங்குகின்ற மரகதக் கல்லின் கொழுவிய பேரொளி கலக்கப் பெறுதலால்; பருதி வானவன் - சூரிய தேவனது; பசும்பரி புரைவன - பச்சை நிறக் குதிரைகளை ஒப்பன; பாராய்! - காண்பாயாக.

மலை மேல் உள்ள மரகத மணிகளின் ஒளி சுற்றப்பெற்ற மலை ஆடுகள் சூரியனின் பச்சை நிறக் குதிரைகளைப் போலத் தோற்றம் அளிக்கின்றன. சுருதி போல் தெளி மரகதம் என்றது வேதம் தெளிந்த ஒளி உடைய மரகதக்கல் என்றவாறாம். இனி, மரகத நிறம் உடைய திருமாலை வேதம் உணர்த்துதல் போல மரகதக் கல்லும் அத்திருமாலை நினைப்பூட்டுகிறது என்பாரும் உளர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O cuckoo, whose eyes are streaked with red like a blood-stained sword!
  2. The wild goats that leap about on the heights of the great mountain,
  3. bathed in the rich glow of emeralds clear as the Veda,
  4. look like the green horses of the sun god: behold!

What the poem says

Irāmaṉ now calls Cītai a cuckoo, for her sweet voice, and praises the faint red lines in her eyes, a mark of beauty. He shows her the mountain goats leaping on the heights.

Lit green by the emeralds in the rocks, they look like the green horses that draw the sun's chariot. The emeralds are "clear as the Veda": either as luminous as scripture, or, as some read it, because like the Veda they bring to mind the emerald-hued god Tirumāl (Viṣṇu).

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuruti vāḷ eṉac cev ari paranta kaṇ kuyilē!
maruvi māl varai umparil kutikkiṉṟa varuṭai,
curutipōl teḷi marakatak koḻuñ cuṭar cuṟṟa,
paruti vāṉavaṉ pacum pari puraivaṉa pārāy!